க்ரைம்

ஜெம் வீரமணி வழக்கில் கார் ஓட்டுநர்கள் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கடந்த ஆக.29-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். அவரது செயல்​களுக்கு உடந்தையாக இருந்​த​தாக கூறப்​படும் சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மனும் கைது செய்​யப்​பட்​டனர். பின்​னர் குண்​டர் சட்டத்​தில் அவர்​கள் சிறை​யில் அடைக்​கப்பட்​டனர்.

வீரமணி​யின் நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய அவரது உதவி​யாளர் கணேசனும் கைது செய்​யப்​பட்​டார். ஏற்​கெனவே ஜெம் வீரமணி மீது 4 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள நிலை​யில் மேலும் ஒரு வழக்கு கடந்த 2-ம் தேதி பதிவு செய்​யப்​பட்டு புலன் விசாரணையில் உள்​ளது.

தொடர் விசா​ரணை​யில், வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்​தை​யாக இருந்த குற்​றத்​துக்​காக, அவரது கார் ஓட்​டுநர்​கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகிய 3 பேர் நேற்று கைது செய்​யப்​பட்​டனர். வீரமணி​யிடம் லாசர் 23 ஆண்​டு​களும், பாபு, பார்த்​திபன் 8 ஆண்டு​களும் பணிபுரிந்துள்ளனர். அவர்​களது வீடு​களில் நடத்திய சோதனையில், 8 செல்​போன்​, 55 முக்​கிய ஆவணங்​கள் கைப்பற்றப்​பட்​டன.

SCROLL FOR NEXT