பகவதி, புஷ்பராஜ், கலைச்செல்வன்

 
க்ரைம்

காஞ்சிபுரம் | கோயில் திருவிழா இரட்டைக் கொலை விவகாரத்தில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: படுநெல்லி கிராமத்​தில் கோயில் திரு​விழா​வில் ஏற்​பட்ட தகராறில் 2 பேர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் 3 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்​தில் மாரி​யம்​மன் கோயில் திரு​விழாநடை​பெற்று வரு​கிறது. விழா​வின்​போது ஒலிபெருக்​கி​யில் பாடல் ஒலிபரப்​புவது தொடர்​பாக ஏற்​பட்ட தகராறில், அதே பகு​தி​யைச் சேர்ந்த சந்​திரசேகர் (27), நீல​கண்​டன் (27) ஆகிய இரு​வர் வெட்​டிக்கொலை செய்​யப்​பட்​டனர்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பாக பொன்​னேரிக்​கரை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வந்​தனர். தொடர்ந்து குற்​ற​வாளி​களைப் பிடிக்க அமைக்​கப்​பட்ட தனிப்​படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தி, படுநெல்லி கிராமத்​தைச் சேர்ந்த பகவதி (24), புஷ்ப​ராஜ் (26), கலைச்​செல்​வன் (26) ஆகிய 3 பேரை​யும் கைது செய்​தனர். கைதான மூவரிட​மும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT