தினேஷ்கு​மார்

 
க்ரைம்

சென்னை | டிபன் கடைக்காரர் வீட்டில் கொள்ளை: தினமும் சவாரிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: டிபன் கடை உரிமை​யாளரின் வீட்​டில், தின​மும் சவாரிக்கு வந்த ஆட்டோ ஓட்​டுநரே பணத்தை கொள்​ளை​யடித்​துச் சென்​றுள்​ளார்.

சென்னை புளியந்​தோப்​பு, கேபி பார்க்பகு​தி​யைச் சேர்ந்​தவர் குமார். இவரது மனைவி செல்வி (37). இவர்​கள் மாலை நேர டிபன் கடை நடத்தி வரு​கின்​றனர். கடந்த 19-ம் தேதி மாலை செல்வி தனது கணவர் மற்​றும் மகளு​டன் வீட்டை பூட்​டி ​விட்டு கடைக்​குச் சென்​றார்.

வியா​பாரத்தை முடித்​து​விட்டு திரும்பி வந்து பார்த்​த​போது வீட்​டின் பூட்டு உடைக்​கப்​பட்​டிருந்​தது. பீரோ​வில் வைத்​திருந்த ரூ.46 ஆயிரம் திருடப்​பட்​டிருந்​தது. அதிர்ச்சி அடைந்த செல்வி இதுகுறித்து பேசின் பாலம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தியதில் சம்பவ இடத்தைசுற்றி பொருத்​தப்பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில்துப்பு துலக்​கப்​பட்​டது.

இதில், செல்வி வீட்​டில் திருட்​டில் ஈடு​பட்​டது சென்னை கொசப்​பேட்​டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுந​ர் தினேஷ்கு​மார் (23) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் தினேஷ் கு​மார், செல்வி​யின் குடும்​பத்துக்கு ஏற்​கெனவே நன்கு அறி​முக​மானவர் என்​பதும், தின​மும் செல்​வியை, அவரது ஆட்​டோ​வில் கடை​யில் இறக்கி விட்​டு, வியா​பாரம் முடிந்த பின்​னர் வீட்​டுக்கு அழைத்து வருவதை வழக்​க​மாக வைத்​துள்​ளார்.

சம்​பவத்​தன்​றும், செல்​வியை கடைக்கு அழைத்​துச் சென்​று விட்டுவிட்டு திரும்பி வந்து வீட்​டின் பூட்டை உடைத்து திருட்​டில் ஈடு​பட்​டுள்​ளார் என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, தினேஷ்கு​மாரை போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறையில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT