க்ரைம்

சென்னை | ரூ.4 கோடி டெண்டர் வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடிக்கு உடந்தை: தெலங்கானா இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.4 கோடி மதிப்​பிலான டெண்​டர் வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பண மோசடி செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், தெலங்​கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்னை வானகரம், மேட்​டுக்​குப்​பம், தொழிற்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஜெயந்​தி​பாபு (35). இவரை மர்ம நபர் ஒரு​வர் செல்​போனில் தொடர்பு கொண்​டு, பிரபல நிறு​வனத்​தில் ரூ.4 கோடி மதிப்​பிலான தானி​யங்கி கதவு​கள் தொடர்​பான டெண்​டர் வர உள்​ள​தாக​வும், அந்த டெண்​டரை பெற்​றுத் தரு​வ​தாக​வும் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

இதற்​காக முதலில் பிணைத் தொகையை செலுத்த வேண்​டும் என்று கூறி, பல தவணை​களாக மொத்​தம் ரூ.12 லட்​சத்து 70 ஆயிரத்தை குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பச் செய்​துள்​ளார்.

சைபர் கிரைம் பிரிவில் புகார்

பின்​னர் அந்த நபரை தொடர்​பு​கொள்ள முடி​யாத​தால், தான் மோசடிக்கு ஆளானதை உணர்ந்த ஜெயந்​தி​பாபு, கடந்த மார்ச் 11-ம் தேதி சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, வங்​கிப் பரிவர்த்​தனை​கள் மற்​றும் டிஜிட்​டல் ஆதா​ரங்​களை ஆய்வு செய்து விசா​ரணை நடத்​தினர்.

அதில் மோசடி​யில் பயன்​படுத்​தப்​பட்ட வங்​கிக் கணக்​கின் பயன்​பாட்​டாளர் தெலங்​கானா மாநிலத்​தைச் சேர்ந்த மோகி​லிகிட்டா மகேஷ் (33) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் தெலங்​கானா மாநிலம் சென்​று, அங்​குள்ள மொய்​னா​பாத் போலீ​ஸாரின் உதவி​யுடன், மெடப்​பள்ளி கிராமத்​தைச் சேர்ந்த மோகி​லிகிட்டா மகேஷை கடந்த 27-ம் தேதி கைது செய்​தனர். பின்​னர் அங்​குள்ள நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சென்னை அழைத்து வந்​தனர்.

ரூ.2.75 லட்சம் கமிஷன்

போலீ​ஸாரின் விசா​ரணை​யில், கைதான மோகி​லிகிட்டா மகேஷ் ஆன்​லைன் சேவை மையம் நடத்தி வந்​ததும், மோசடி​யில் ஈடு​பட்ட முக்​கிய நபருக்கு தனது வங்​கிக் கணக்கை பயன்​படுத்த அனு​ம​தித்​ததும் தெரிய​வந்​தது.

புகார் அளித்த ஜெயந்​தி​பாபு​விட​மிருந்து வந்த ரூ.12.70 லட்​சத்தை பெற்​று, அதனை பிர​தான மோசடி கும்​பலிடம் ஒப்​படைத்​ததற்​காக ரூ.2 லட்​சத்து 75 ஆயிரம் கமிஷன் பெற்​றதும் வி​சா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

SCROLL FOR NEXT