க்ரைம்

மனைவியை துன்புறுத்திய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி கைது

செய்திப்பிரிவு

வேலூர் : கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி ஜாபர் சித்திக், கடந்த 2024-ம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றினார். அப்போது, அரக்கோணத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், பரமக்குடி உட்கோட்ட டிஎஸ்பியாக ஜாபர் சித்திக் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே, தனது கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அதை தட்டிக்கேட்டதால் அடித்து துன்புறுத்துவதாகவும் டிஜிபி அலுவலகத்தில் ஷோபனா புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீஸார் ஜாபர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 21-ல் டிஎஸ்பி பணியில் இருந்து ஜாபர் சித்திக், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், வேலூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்காக ஜாபர் சித்திக் நேற்று முன்தினம் ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT