க்ரைம்

சூட்கேஸில் இளைஞர் சடலம் விவகாரத்தில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொன்றது அம்பலம்

செய்திப்பிரிவு

சென்னை: பெரம்​பூரில் சூட்​கேஸில் இளைஞர் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட விவ​காரத்​தில் திடீர் திருப்​ப​மாக, திரு​மணத்தை மீறிய உறவால் மனை​வியே கணவரை கொன்​றது தெரிய​வந்​துள்​ளது.

சென்னை பெரம்​பூர் ரயில் நிலைய நடை​பாதை​யில் இருந்த ஒரு சூட்​கேஸில் இளைஞரின் சடலம் சிதைக்​கப்​பட்ட நிலை​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை கண்​டெடுக்​கப்​பட்​டது.

இந்த கொடூர சம்​பவம் தொடர்​பாக 8 தனிப்​படைகளை அமைத்து போலீ​ஸார் விசா​ரித்து வந்​தனர். இதில், கொலை செய்​யப்​பட்​ட​வர் சென்னை தேனாம்​பேட்​டை​யில் வசித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் அலி (30) என்​பது தெரிய​வந்​தது.

அமீர் அலியை அவரது மனைவி ரோகிமா (31) தனது ஆண் நண்​ப​ரான அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த அஸ்​லாம் (31) என்​பவருடன் சேர்ந்து கொலை செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, இரு​வரை​யும் கைது செய்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். கொலைக்​கான காரணம் குறித்​து, ரோகிமா கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​த​தாவது: அமீர் அலி எனக்கு 2-வது கணவர்.

வட மாநிலங்​கள் மற்​றும் வங்​கதேசத்​தில் இருந்து சென்​னைக்கு மருத்​துவ சிகிச்​சைக்​காக வரும் நோயாளி​களுக்கு தங்​கும் இடவசதி செய்து தரும் தொழிலை கணவருடன் செய்து வந்​தேன். என் கணவருக்கு பல பெண்​களு​டன் தவறான தொடர்பு இருந்​தது.

நான் கண்​டித்​தும் என் பேச்சை கேட்​க​வில்​லை. என்னை அடிக்​கடி கொடூர​மாக அடித்து துன்​புறுத்​தி​னார். அவரது நடவடிக்​கைகளை என்​னால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்​லை.

உறவுக்கு இடையூறாக

இந்​நிலை​யில்​தான் அஸ்​லா​முடன் எனக்கு தொடர்பு ஏற்​பட்​டது. இதை கணவர் கண்​டித்​தார். இதனால், நாங்​கள் இரு​வரும் ஓடிச் சென்று வேறு இடத்​தில் கணவன், மனை​வி​யாக வாழலாம் என நினைத்​தோம். அந்த திட்​டத்தை பின்​னர் கைவிட்​டோம்.

எங்​கள் உறவுக்கு இடையூறாக இருக்​கும் கணவரை தீர்த்​துக்​கட்ட முடிவு செய்​தோம். சம்​பவத்​தன்று அமீர் அலி போதை​யில் இருந்​தார். அவருக்கு தூக்க மாத்​திரை கலந்து கொடுத்து மயங்​கச் செய்​தேன். அவர் மயங்​கியதும் நானும், அஸ்​லா​மும் அவரை கொலை செய்து தலை, கைகள் மற்​றும் கால்​களை துண்டு துண்​டாக வெட்​டினோம்.

உடலின் நடுப்​பகு​தியை மட்​டும் சூட்​கேஸில் அடைத்​து, ஆட்​டோ​வில் எடுத்​துச் சென்று பெரம்​பூர் ரயில் நிலைய படிக்​கட்​டு​களுக்கு அடி​யில் வீசி​விட்டு சென்​றோம். தலை, கால் மற்​றும் பாகங்​களை செங்​கல்​பட்​டில் ஓடும் ரயி​லில் வீசினோம். இதற்கு அஸ்​லாம் எனக்கு முழு​மை​யாக உதவி​னார். இவ்​வாறு ரோகிமா கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

முதல்​கட்ட விசா​ரணை மட்​டுமே தற்​போது நிறைவடைந்​துள்​ளது. இவர் சொல்​வது உண்​மை​யா? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்​ளதா என தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது. அமீர் அலி​யின் உடல் பாகங்​கள் வீசப்​பட்​ட​தாக கூறப்​படும் இடங்​களில்​ அவற்​றை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT