க்ரைம்

கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் பெண் காவலர்களை வீடியோ எடுத்த எஸ்எஸ்ஐ கைது

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்​குடி​யில் நேற்று முன்​தினம் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்​டபத்தை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். முதல்​வர் வரு​கை​யையொட்டி பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து பாது​காப்​புக்​காக போலீ​ஸார் வந்​திருந்​தனர்.

பரமக்​குடி நகர் காவல் நிலை​யத்​தில் சிறப்பு உதவி ஆய்​வாள​ராகப் பணிபுரிந்து வந்த முத்​துப்​பாண்​டி, மணி நகரில் உள்ள சோதனைச் சாவடி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார். அங்கு சில பெண் காவலர்​களும் பணி​யில் இருந்​தனர்.

சோதனைச்​சாவடி அருகே உள்ள கழிப்​பறைக்கு தஞ்​சாவூரைச் சேர்ந்த பெண் காவலர் ஒரு​வர் சென்​றார். அப்​போது, அங்கு செல்​போன் கேமரா மூலம் வீடியோ பதி​வாகிக் கொண்​டிருந்​ததைப் பார்த்து அதிர்ச்​சி​யடைந்​தார். இது குறித்து காவல் துறை உயர் அதி​காரி​களுக்​குத் தகவல் தெரி​வித்​தார்.

விசா​ரணை​யில், அந்த செல்​போனை வைத்து வீடியோ எடுத்​தது எஸ்​எஸ்ஐ முத்​துப்​பாண்டி என்​பது தெரிய வந்​தது. இதையடுத்​து, தஞ்​சாவூரைச் சேர்ந்த பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்​படை​யில் முத்​துப்​பாண்டி மீது வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், அவரை நேற்று கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT