க்ரைம்

சென்னை | கந்து வட்டி கேட்டு தாக்குதல்: மகன் கைது, தாய் தலைமறைவு

செய்திப்பிரிவு

சென்னை: எழும்​பூர், சூரம்​மாள் தெரு​வில் வசித்து வருபவர் ஜெய​காந்​தன் (52). சிந்​தா​திரிப்​பேட்​டையில் நாட்டு மருந்​துக் கடை நடத்தி வரு​கிறார்.

தொழிலை விரிவுபடுத்​த இவர் அதே பகு​தி​யைச் சேர்ந்த தேவி என்​பவரிடம் ரூ.2.80 லட்​சத்தை 2 சதவீத வட்டிக்கு சமீபத்​தில் கடனாகப் பெற்​றார். பின்​னர் வட்டியும், அசலும் சேர்த்து ரூ.3 லட்​சத்து 43,500-ஐ திருப்​பிக் கொடுத்​துள்​ளார்.

ஆனாலும் கடன் பெறும்​போது அடமான​மாகப் பெற்ற காசோலைகளை தேவி திருப்​பிக் கொடுக்​க​வில்​லை. இதனால் இருவருக்​கும் தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த 24-ம் தேதி ஜெய​காந்​தன் அவரது கடையி​லிருந்​த​போது, தேவி தன் மகன் ஓசோனுடன் (30) சென்று இரும்​புக் கம்​பி, பிளாஸ்​டிக் பைப்​பால் ஜெய​காந்​தனை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.

காயமடைந்த ஜெய​காந்​தன் ஓமந்​தூ​ரார் அரசு பொது மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார். இதுகுறித்து சிந்​தா​திரிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து ஓசோனை கைது செய்​துள்​ளனர். தலைமறை​வாக உள்​ள அவரது தாயை தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT