நடராஜன்

 
க்ரைம்

சென்னை | மனைவி திட்டிய ஆத்திரத்தில் உடல்நலக்குறைவால் படுக்கையில் கிடந்த தந்தையை கொலை செய்த மகன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மனைவி திட்​டிய ஆத்​திரத்​தில் உடல்​நலக்​குறை​வால் படுக்​கை​யில் கிடந்த தந்​தையை கத்​தி​யால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்​யப்​பட்​டார்.

பெர​வள்​ளூர் வெற்றி நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ராஜேந்​திரன் (68). இவரது மகன் நடராஜன் (45). இரு​வரும் ஒரே வீட்​டில் வசித்து வந்​தனர். சில நாட்​களுக்கு முன்பு கீழே தவறி விழுந்​த​தில் ராஜேந்​திரனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது.

இதனால் கடந்த 20 நாட்​களுக்​கும் மேலாக அவர் படுக்​கை​யிலேயே இருந்து வந்​தார். இந்​நிலை​யில், ராஜேந்​திரனின் மரு​மகள் எழில் தனது கணவர் மற்​றும் மாம​னாரை வீட்​டில் விட்​டு​விட்​டு, குழந்​தைகளு​டன் வேளாங்​கண்ணி தேவால​யத்​துக்கு சென்​றிருந்​தார்.

அவர், நேற்று முன்​தினம் இரவு வீடு திரும்​பிய​போது, ராஜேந்​திரன் படுக்​கை​யில் கத்​திக்​குத்து காயங்​களு​டன் உயிருக்கு போராடிய நிலை​யில் கிடந்​தார். அதே நேரத்​தில் அவரது கணவர் நடராஜன் மது​போதை​யில் வீட்​டில் தரை​யில் படுத்து தூங்​கிக்​கொண்​டிருந்​தார்.

இதைப்​பார்த்து அதிர்ச்சி அடைந்த எழில், உடனடி​யாக ராஜேந்​திரனை மீட்டு பெரி​யார் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றார். ஆனால் அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ராஜேந்​திரன் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

இதுகுறித்து திரு.​வி.க. நகர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், தந்​தையை மகன் நடராஜனே கத்​தி​யால் குத்​திக்​கொலை செய்​தது தெரிய​வந்​தது.

உடல்​நலக்​குறை​வால் படுத்த படுக்​கை​யாக இருந்த ராஜேந்​திரன், சிறுநீர் மற்​றும் மலம் ஆகிய​வற்றை படுக்​கை​யிலேயே கழித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இதனை மரு​மகள் எழில் சுத்​தம் செய்து வந்​ததுடன், இதுதொடர்​பாக கணவர் நடராஜனிடம் அடிக்​கடி சண்​டை​யிட்​ட​தாக​வும் தெரி​கிறது.

இதனால் ஆத்​திரத்​தில் இருந்த நடராஜன், மனைவி குழந்​தைகளு​டன் வேளாங்​கண்ணி சென்​றிருந்த நேரத்தில் மது​போதை​யில் வீட்​டுக்கு வந்து, படுக்​கை​யில் இருந்த தந்​தையை கத்​தி​யால் குத்​திக்​கொலை செய்​த​தாக போலீஸ் வி​சா​ரணை​யில் தெரிய​வந்தது. இதையடுத்து போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்​து நட​ராஜனை கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT