ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு

 
க்ரைம்

அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஆந்திர மாநில சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திரு​வான்​மியூர் கெனால் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் மங்​கல்​சந்த் (63). இவர் அடை​யாறு இந்​திரா நகர் 17-வது குறுக்​குத் தெரு​வில் நகை அடகுக் கடை நடத்தி வரு​கிறார்.

கடந்த 11-ம் தேதி அதி​காலை மங்​கல்​சந்​தின் அடகுக் கடைக்கு அரு​கில் வசிப்​பவர்​கள், செல்​போன் மூலம் அவரை தொடர்பு கொண்​டு, கடை​யின் பூட்டை யாரோ உடைக்க முயற்சி செய்​வ​தாக தெரி​வித்​தனர்.

இதையடுத்து மங்​கல்​சந்த் கடைக்கு சென்று பார்த்​த​போது, கொள்​ளை​யன் ஒரு​வர் கடை​யின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்று கொண்​டிருந்​தார். உடனே மங்​கல்​சந்த் சத்​தம் போட்​டார். அவரது சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் திரண்டு கொள்​ளை​யனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து திரு​வான்​மியூர் போலீ​ஸில் ஒப்​படைத்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பிடிபட்​ட​வர் நெல்​லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை கைது செய்​த போலீ​ஸார். ஒரு செல்​போன் மற்​றும் குற்​றச்​செயலுக்​குப் பயன்​படுத்​திய கட்​டிங் மிஷின், சுத்​தி​யல், ஜாக்​கி, டிரில்​லிங் மிஷின், ஸ்குரூ டிரைவர் உள்​ளிட்டவற்றை பறி​முதல் செய்​தனர். இதையடுத்​து அவர்​ சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT