க்ரைம்

ஆலங்குளம் அருகே திருமண வீட்டில் 6 பேருக்கு வெட்டு

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிராமம் நெட்டூர். இங்குள்ள சர்ச் தெருவில் திருமண வீட்டில் நேற்று விருந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

அப்போது, முகமூடி அணிந்து வந்த சிலர், திடீரென திருமண வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் கூச்சலிட்டனர்.

அந்த கும்பல், 6 பேரை வெட்டிவிட்டு, இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த 6 பேரும் நெல்லை மற்றும் ஆலங்குளம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகமூடி அணிந்து வந்தவர்கள் யார்?, எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என தெரியவில்லை.

இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆலங்குளம்- சங்கரன்கோவில் சாலையில் நெட்டூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT