கர்நாடகா ஹுப்ளியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் பயணிகளை கண்காணித்து இருவரது பைகளை சோதித்தபோது, ரூ.8 லட்சத்து 800 மதிப்பிலான 2.86 கிலோ எடைக்கொண்ட தங்கம், வெள்ளி இருந்தது.
அந்த நபர், திருப்பதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு. ஆந்திர மாநிலம் புரோட்டாட்டூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் முனாவர் பாஷாவிடம் சோதனை செய்தபோது, ரூ.63.37 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் இருந்தது. இரு வரையும் ரயில்வே போலிஸார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.