க்ரைம்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி பணிபுரிந்த வங்கியிலேயே ரூ.3.5 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய துணை மேலாளர் கைது

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு​வில் இந்​தி​யன் வங்கி துணை மேலா​ளர் கிரண் குமார் (34) லாக்​கரில் இருந்த ரூ.3.5 கோடி மதிப்​பிலான தங்க நகைகளை திருடி விற்​ற​தால் கைது செய்​யப்​பட்​டார்.

கிரிநகர் இந்​தி​யன் வங்கி கிளை​யில் தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்​கை​யாளர்​கள் கடந்த மாதம், அதனை திரும்பபெறு​வதற்கு வந்​த‌னர். அப்​போது வங்​கி​யின் கிளை மேலா​ளர் சம்​பந்​தப்​பட்ட வாடிக்​கை​யாளர்​களின் தங்க நகைகளை தேடிய போது அவை காணா​மல் போனது தெரிய​வந்​தது.

          

இதையடுத்து வங்கி உயர் அதி​காரி​கள் மேற்​கொண்ட விசாரணை​யில், லாக்​கரில் 21 பாக்​கெட்​டு​களில் இருந்த 2780 கிராம் தங்க நகைகள் காணா​மல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகைகளை கிளை மேலா​ளர் விடுப்பில் இருந்​த​போது துணை மேலா​ளர் கிரண் குமார் திருடியது தெரிந்​தது.

இதையடுத்து கிளை மேலா​ளர் கிரிநகர் காவல் நிலை​யத்​தில் கடந்த 6ம் தேதி புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் கிரண் குமாரிடம் விசா​ரணை நடத்​தினர். அதில் அவர், கடந்த 3 மாதங்களில் 2,780 கிராம் தங்க நகைகளை திருடி, தனி​யார் நிதி நிறு​வனங்​களில் அடகு வைத்​ததை ஒப்​புக்​கொண்​டார். இதையடுத்து போலீ​ஸார் அவரை நேற்று கைது செய்​தனர்.

இது குறித்து பெங்​களூரு தெற்கு துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் ஜக்​லேஷர் கூறுகை​யில், "சம்பந்தப்பட்ட வங்​கி​யின் துணை மேலா​ளர் கிரண் குமார் ரூ.3.5 கோடி மதிப்​பிலான தங்​கத்தை திருடி​யுள்​ளார். அதனை அடகு வைத்​துள்​ளார். அவ‌ரிடம் இருந்து இது​வரை 700 கிராம் தங்​கத்தை பறி​முதல் செய்​துள்​ளோம். அவர் அடகு வைத்த நிதி நிறு​வனங்​கள் தங்க நகைகளை தர மறுக்​கின்​றன. எனவே நீதி​மன்​றத்தை நாட முடி​வெடுத்​துள்​ளோம்.

ஆன்​லைன் சூதாட்​டத்​துக்கு அடிமை​யான கிரண் குமார், கடந்த 2 ஆண்​டு​களில் ரூ.25 லட்​சத்தை இழந்​துள்​ளார். அதற்​காக கடன் வாங்​கிய​தால் அதனை அடைப்​ப​தற்​காக நகைகளை திருட ஆரம்பித்​துள்​ளார். நகைகளை திருடி அடகு வைத்து பணம் பெற்று அதனை​யும் ஆன்​லைன் சூதாட்​டத்​தில் இழந்​துள்​ள​தாக வாக்​குமூலம் அளித்​துள்​ளார்" என்றார்.

SCROLL FOR NEXT