க்ரைம்

பெருந்துறையில் கத்திமுனையில் மிரட்டி கார் விற்பனையாளரிடம் ரூ.1 கோடி பறிப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: பெருந்துறையில் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவரை, கத்திமுனையில் மிரட்டி ரூ.1 கோடியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பவானி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும், பெருந்துறையில் சாய்பாபா கோயில் கட்டுவதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து நன்கொடையாக ரூ.1 கோடி ரொக்கத்தை அருண்குமார் நேற்று முன்தினம் பெற்றுள்ளார். பின்னர், பெருந்துறை காஞ்சிக்கோயில் சாலையில் உள்ள சாய் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள், அருண்குமாரை கத்திமுனையில் மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1 கோடி ரொக்கத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT