க்ரைம்

போலீஸ் அதிகாரி என மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.1 கோடி பறிப்பு

முகவராக செயல்பட்ட செல்போன் வியாபாரி கைது

செய்திப்பிரிவு

சென்னை: தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீஸ் அதி​காரி என சைபர் மோசடி கும்​பல் மிரட்​டி, ஓய்வு பெற்ற வங்கி அதி​காரி​யிடம் ரூ.1 கோடி பறித்​துள்​ளது. இந்த வழக்​கில் முகவ​ராக செயல்​பட்ட செல்​போன் வியா​பாரி கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை நொளம்​பூரில் வசிப்​பவர் ஓய்​வு​பெற்ற வங்கி மேலா​ளர் சத்​தி​யமூர்த்தி (60). இவருக்கு கடந்​தாண்டு நவ.27-ம் தேதி போன் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், தன்னை தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீஸ் அதி​காரி என அறி​முகம் செய்​து​கொண்​டார்.

          

அவர், “என்ஐஏ அதி​காரி​கள் கொடுத்த ரகசிய அறிக்​கைப்​படி, நீங்​கள் பாது​காப்​பான தகவல்​களை தீவிர​வா​தி​களுக்கு கொடுத்து பணப்​பலன்​களை பெற்​றுள்​ளீர்​கள். எனவே உங்​களை டிஜிட்​டல் முறை​யில் கைது செய்​துள்​ளோம்.

விசா​ரணை முடி​யும் வரை நீங்​கள் வீட்​டை​விட்டு வெளி​யேறி​னாலோ, இதை வெளியே சொன்​னாலோ உங்​கள் வீட்​டுக்கு வெளியே தயார் நிலை​யில் உள்ள போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​து​விடு​வார்​கள்.

மேலும் இது தொடர்​பான தகவல்​கள் ஊடகங்​களுக்கு கொடுக்​கப்​பட்டு வெளி​யிடப்​படும். இப்​படி நடக்​கக் கூடாது என்​றால் விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு தாருங்​கள்” என தெரி​வித்​தார்.

மேலும், “நீங்​கள் நிரப​ராதி என நிரூபிக்க உங்​களது வங்​கிக் கணக்​கில் உள்ள மொத்த பணத்​தை​யும் நாங்​கள் கூறும் வங்​கிக் கணக்​குக்கு அனுப்பிவைக்​க​வும். அதை சரி​பார்த்த பின்​னர், உங்​கள் மீது தவறு இல்லை என்​றால் பணத்தை திருப்பி அனுப்​பி​விடு​வோம்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, சத்​தி​யமூர்த்தி தன்னை நிரப​ராதி என நிரூபிக்க தனது வங்​கிக் கணக்​கில் இருந்த ரூ.1 கோடியே 7 ஆயிரத்தை அனுப்பி வைத்​தார். அதன் பிறகு எதிர்​தரப்​பினரை தொடர்பு​கொள்ள முடிய​வில்​லை.

தாம் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த சத்​தி​யமூர்த்​தி, இது தொடர்​பாக சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் மோசடி செய்​யப்​பட்ட பணம் பல மாநிலங்​களுக்கு அடுத்​தடுத்து மாற்​றப்​பட்​டது தெரிய​வந்​தது.

மேலும் சைபர் க்ரைம் மோசடி கும்​பல் சென்னை மண்​ணடி, ராம​சாமி தெரு​வைச் சேர்ந்த அஜருதீன் (40) என்​பவரது வங்​கிக் கணக்கை பயன்​படுத்​தி, அந்த கணக்​கில் சத்​தி​யமூர்த்​தியை பணம் போட வைத்​துள்​ளனர். இதையடுத்து அஜருதீன் கைது செய்​யப்​பட்​டார்.

இவர் பர்மா பஜாரில் மின்​னணு பொருட்​கள் விற்​பனை மற்​றும் மொபைல் போன் வியா​பாரம் செய்​து​வந்​தது தெரிய​வந்​தது. மேலும் அவர் 40-க்​கும் மேற்​பட்ட வங்​கிக் கணக்​கு​களை மோசடி கும்​பல் பயன்​படுத்த கொடுத்து 3 சதவீத கமிஷன் பெற்​று​வந்​துள்​ளார்.

இப்​படி சைபர் க்ரைம் மோசடி கும்​பலிடம் இது​வரை ரூ.1.2 லட்​சம் கமின​ரான பெற்​றுள்​ளார். இதையடுத்து அவரை போலீ​ஸார் சிறை​யில் அடைத்​தனர். இந்த மோசடிக்கு மூளை​யாகச் செயல்​பட்ட மோசடி கும்​பலை தனிப்​படை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT