க்ரைம்

தாம்பரம் | ஆட்டோ திருட்டு வழக்கில் பிடிக்கச் சென்றபோது போலீஸை பார்த்ததும் கழுத்தை அறுத்துக் கொண்ட ரவுடி

செய்திப்பிரிவு

தாம்பரம்: சென்னை வியாசர்​பாடி மல்​லிப்பூ காலனியைச் சேர்ந்த முனுசாமி​யின் மகன் அஜித் (26). இவர் மீது 3 கொலை வழக்​கு​கள் உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

கடந்த செப்.30-ம் தேதி ஆட்டோ திருடு​போனது தொடர்​பாக பீர்க்​கன்​கரணை காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்து போலீ​ஸார் விசா​ரித்து வந்​தனர்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய அஜித்​தைப் பிடிப்​ப​தற்​காக, குற்​றப்​பி​ரிவு ஆய்​வாளர் தர் தலை​மையி​லான போலீ​ஸார், நேற்று அதி​காலை புழல் காவாங்​கரை பகுதிக்​குச் சென்​றனர்.

அஜித்தை போலீ​ஸார் பிடிக்க முயன்​றபோது, அவர் தன்​னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்​துக் கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவரை மீட்டு தாம்​பரம் மாவட்ட தலைமை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

அங்கு அவருக்​குக் கழுத்​தில் 18 தையல்​கள் போடப்​பட்​டன. தொடர்ந்து அஜித்தை பீர்க்​கன்​கரணை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT