எண்ணூர் தனசேகரன்

 
க்ரைம்

‘ஏ பிளஸ்’ ரவுடி எண்ணூர் தனசேகரனின் ஜாமீன் ரத்து

செய்திப்பிரிவு

பொன்னேரி: சிறையி​லிருந்து ஜாமீனில் வெளியே வந்த முக்​கிய ரவுடி​யான எண்​ணூர் தனசேகரன் மீண்​டும் குற்​றச்​செயலில் ஈடுபட்​ட​தால் அவரது ஜாமீன் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

எண்​ணூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் தனசேகரன் என்​கிற எண்​ணூர் தனசேகரன். எண்​ணூர் காவல் நிலை​யத்​தின் ‘ஏ-பிளஸ்’ சரித்திரப் பதிவேடு குற்​ற​வாளி​யான இவர் மீது 9 கொலை வழக்​கு​கள், 11 கொலை முயற்சி வழக்​கு​கள், 5 வழிப்​பறி வழக்​கு​கள், ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்​தல், கொள்ளை உள்​ளிட்ட மொத்தம் 80 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

இந்​நிலை​யில் மீஞ்​சூர் அருகே உள்ள வழு​தி​கைமேடு பகு​தி​யில் பழைய இரும்​புப் பொருட்​கள் விற்​பனை செய்​து​வந்த, திருநெல்வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்த சுந்​தரலிங்​கம் என்​பவரை தனசேகரன் போனில் அழைத்​து, மாதந்​தோறும் மாமூல் தர வேண்டும் என மிரட்​டி​யுள்​ளார். மேலும் சுந்​தரலிங்​கத்​தின் சட்டைப் பையி​லிருந்து தனசேகரின் கூட்​டாளி ரூ.5 ஆயிரத்தை பறித்​துச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மீஞ்​சூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, தனசேகரனை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்த வழக்​கில் தனசேகரனுக்கு கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொன்​னேரி ஜே.எம்.1 நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. இதையடுத்து, சிறையி​லிருந்து வெளியே வந்த தனசேகரன், தன் கூட்​டாளி​களு​டன் சேர்ந்​து, கடந்த ஏப்​ரல் மாதத்​தில் வடசென்னை அனல் மின் நிலைய பணி​களை மேற்​கொள்​ளும் தனி​யார் நிறுவன அதி​காரி​யிடம் ரூ.10 லட்​சம் கேட்டு மிரட்​டி, தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.

இச்​சம்​பவம் தொடர்​பாக காட்​டூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து, தனசேகரன் மற்​றும் அவரது கூட்​டாளி​களை கைது செய்தனர். நிபந்​தனை​யுடன் ஜாமீன் பெற்று வெளியே வந்த தனசேகரன் தொடர்ந்து குற்​றச்​செயலில் ஈடு​பட்​ட​தால், அவரது ஜாமீனை நேற்று முன்​தினம் பொன்​னேரி ஜே.எம்.1 நீதி​மன்​றம் ரத்து செய்​தது. இதையடுத்து மீண்​டும் எண்​ணூர் தனசேகரன் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

SCROLL FOR NEXT