க்ரைம்

சென்னை | பணம் இல்லாததால் பூண்டு மூட்டையை தூக்கிச் சென்றார்: மளிகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மளி​கைக் கடைக்​குள் புகுந்த கொள்ளையன், எதிர்​பார்த்த பணம் இல்​லாத​தால் அங்​கிருந்த பூண்டு மூட்​டையை திருடிச் சென்​றார். மயி​லாப்​பூர், நடுத்​தெரு​வில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்​தில் பாஸ்​கர் (52) என்​பவர் குடும்​பத்​தினருடன் வசித்து வரு​கிறார்.

அவர் அந்த வீட்​டின் தரைத் ​தளத்​தில் மளி​கைக் கடை வைத்​துள்​ளார். கடந்த 16-ம் தேதி மதி​யம் மளி​கைக் கடையை மூடி, வீட்​டுக்​குச் சாப்​பிட்​டு​விட்​டு, கடைக்கு வந்து பார்த்​த​போது, உள்ளே இருந்த மளி​கைப் பொருட்​கள் சிதறி 25 கிலோ பூண்டு மூட்டை திருடப்​பட்​டிருந்​தது.

          

இது தொடர்​பாக, பாஸ்​கர் அளித்த புகாரின் பேரில் மயி​லாப்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து, கொள்​ளை​யில் ஈடு​பட்​ட திரு​வல்​லிக்​கேணி, கபாலி நகரைச் சேர்ந்த முத்து (50) என்ற கொள்ளையனை கைது செய்​தனர்.

மளி​கைக்​ கடை கல்​லாப்​பெட்​டி​யில் குறைந்த அளவு பணம் இருந்​த​தால் விரக்​தி​யில் எதை​யா​வது திருட வேண்​டும் என்​ப​தற்​காக 25 கிலோ பூண்டு மூட்​டையை திருடி, அதை ஆட்​டோ​வில் கடத்​திச் சென்​ற​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, குற்​றச் செயலுக்கு பயன்​படுத்​திய ஆட்​டோ​வும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இவர் மீது ஏற்​கனவே 10 திருட்டு வழக்​கு​கள் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT