க்ரைம்

இரட்டைக் கொலையை கண்டித்து சாலை மறியல்: காளையார்கோவிலில் போலீஸார் தடியடி

செய்திப்பிரிவு

சிவகங்கை: ​காளை​யார்​கோ​விலில் இரட்​டைக் கொலையை கண்​டித்து மறியலில் ஈடு​பட்​டோர் மீது போலீ​ஸார் தடியடி நடத்தி 72 பேரை கைது செய்​தனர்.

சிவகங்கை மாவட்​டம், காளை​யார்​கோ​வில் அருகே காயாஓடை புது குடி​யிருப்​பைச் சேர்ந்​தவர் தெய்​வேந்​திரன். சிறு​வேலங்​குடியைச் சேர்ந்தவர் பூப்​பாண்​டி. சிவகங்கை அரு​கே​யுள்ள கொடிக்​காடு கண்​மாய் கரை​யில் கடந்த செப்​.16-ம் தேதி மது அருந்​தி​யுள்​ளனர். அப்போது, ஒரு கும்​பல் அவர்​களை வெட்​டிக் கொலை செய்​தது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து 5 பேரை கைது செய்​தனர். மேலும், விசா​ரணை​யில் அந்​தக் கும்​பல் ஆள் மாறி கொலை செய்​தது தெரிய​வந்​தது.

இதை ஏற்க மறுத்​தும் உண்​மைக் குற்​ற​வாளி​களை கைது செய்ய வலி​யுறுத்​தி​யும் கொலை செய்​யப்​பட்​டோரின் உறவினர்​கள் நேற்று முன்​தினம் சிவகங்​கை​யில் மறியலில் ஈடு​பட்​டனர். நேற்று காளை​யார்​கோ​விலில் காவல் நிலையம் அருகே மறியலில் ஈடு​பட்​டனர். அவர்​களிடம் எஸ்பி அபிஷேக் குப்​தா, கோட்​டாட்​சி​யர் ஜெபிகிரேசியா உள்​ளிட்​டோர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்போது, கொலை​யானோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.50 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​வதோடு, அவர்​களது குடும்​பத்​துக்கு அரசு வேலை வழங்க வேண்​டுமென வலி​யுறுத்​தினர்.

போலீ​ஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்​து, வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இதனால், இருதரப்புக்கும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தவெக எம்​எல்​ஏ: கொலை​யானவர்​களின் உறவினர்​களிடம் சிவகங்கை எம்​எல்ஏ குழந்​தை​ராணி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது, இழப்​பீடு, அரசு வேலை தர வேண்​டும் என கோரப்பட்டது. தொடர்ந்து பேசிய எம்​எல்ஏ பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றார்.

SCROLL FOR NEXT