க்ரைம்

பெண் உதவியாளரிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: பெண் உதவி​யாளரிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக ஓய்​வு​பெற்ற நீதிபதி மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர். சென்னை செனாய் நகரில் 74 வயதுடைய ஓய்​வு​பெற்ற மாவட்ட நுகர்​வோர் நீதி​மன்ற நீதிபதி ஒரு​வர் தனி​யாக வசிக்​கிறார்.

முதுமை காரண​மாக அவருக்கு தேவை​யான உதவி​களை உடனிருந்து கவனிக்​கும் வகை​யில் மடிப்​பாக்​கத்​தில் வசிக்​கும் 43 வயதுடைய பெண் உதவி​யாளர் ஒரு​வர் பணி​யமர்த்​தப்​பட்​டார். ஓய்வு பெற்ற நீதிப​தியை அந்​தப்பெண் உடனிருந்து கவனித்து வந்​தார்.

கடந்த செப்​டம்​பர் மாதம் ஓய்​வு​பெற்ற நீதிப​தி,அந்த பெண்ணை காரில் வெளியே அழைத்​துச் சென்​றுதேவை​யான உடை உள்ளிட்ட பொருட்​களை வாங்​கிக் கொடுத்​துள்​ளார். பின்​னர், இரு​வரும் வீடுதிரும்​பினர்.

இரவு நீண்ட நேரம் ஆகி​விட்​ட​தால் பணிப் பெண்ணை அன்று இரவு தனது வீட்​டிலேயே தங்​கும்​படி ஓய்வு நீதிபதி கேட்​டுக்கொண்​டார். அந்த பெண்​ணும் அங்​கேயே தங்​கி​னார். நள்​ளிர​வில் அந்த பெண்​ணிடம் ஓய்வு நீதிபதி தவறாக நடக்க முயன்​றுள்​ளார்.

அதிர்ச்​சி, அடைந்த பெண், அவரது ஆசைக்கு இணைங்க மறுத்​ததோடு வீட்டை விட்டு உடனடி​யாக வெளி​யேறி உள்​ளார். மறு​நாள் இது தொடர்​பாக டி.பி சத்​திரம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் இரு​வரை​யும் தனித்​தனி​யாக அழைத்து விசா​ரித்​தனர். இதில், ஓய்வு பெற்ற நீதிப​தி, உதவி​யாள​ராக வந்த பெண்​ணிடம் எல்லை மீற முயன்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, அவர் மீது 2 பிரிவு​களின் ​கீழ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

புகார் அளித்த பெண், ஏற்​கெனவே சென்​னை​யில் உள்ளதுணை ஆணை​யர் ஒரு​வர் மீதுபுகார் தெரி​வித்​து, அவர் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT