ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே காவல் துறையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக நாட்றம்பள்ளி நோக்கிச் சென்ற டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட கூத்தாண்டகுப்பத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கேசவனை (24) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.