திருப்பத்தூரில் டிப்பர் லாரி வீட்டுக்குள் நுழைந்து விபத்து ஏற்படுத்தியது. 
Regional01

திருப்பத்தூர்: டிப்பர் லாரி வீட்டுக்குள் நுழைந்து விபத்து

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வீட்டுக்குள் டிப்பர் லாரி நுழைந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இழப்பீடு கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்துார் நகராட்சிக்கு உட்பட்ட சகாய நகரில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சாலை பணிக்காக ஜல்லி கற்களை ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று சகாய நகர் வழியாக வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பரின் வீட்டுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதில், வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் இழப்பீடு கேட்டு டிப்பர் லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த, நகர காவல் துறையினர் மற்றும் ஒப்பந்ததாரர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சேதமடைந்த வீட்டின் சுற்றுச்சுவரை சரி செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து, லாரியை விடுவித்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT