க்ரைம்

புதுச்சேரியில் டியூசன் மாஸ்டரை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு வீசியவரின் கை சிதைந்து காயம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: டியூசன் மாஸ்​டர் மீது பெட்​ரோல் மற்​றும் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற தனி​யார் துணிக்​கடை கேஷியரின் வலது கை சிதைந்​தது.

புதுச்​சேரி ரெட்​டி​யார்​பாளை​யத்தைச் சேர்ந்​தவர் பிரேம்​கு​மார். லாஸ்​பேட்டை கபிலன் நகரில் டியூசன் சென்​டர் நடத்திவரு​கி​றார். இவர் வழக்​கம்​போல நேற்று முன்​தினம் இரவு டியூசன் முடிந்து, பயிற்சி மையத்தை பூட்​டிக் கொண்​டிருந்​தார். அப்​போது உணவு டெலிவரி செய்​வதுபோல வந்த நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்​திருந்த பெட்​ரோல் குண்டை எடுத்​து, பிரேம்​கு​மார் மீது வீசி​னார்.

இதில் அவர் தப்பி அங்கிருந்து ஓ​டினார். பின்னால் துரத்திச் சென்று அந்த நபர் நாட்டு வெடிகுண்டை பிரேம்​கு​மார் மீது வீச முயன்​றார். அப்​போது எதிர்​பா​ரா​த​வித​மாக அந்த நபரின் வலது கையிலேயே வெடிகுண்டு வெடித்​தது. இதில், அவரின் வலது கை சிதைந்​தது.

சத்​தம்​கேட்டு அரு​கி​லிருந்​தவர்​கள் லாஸ்​பேட்டை போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர். போலீ​ஸார் வந்து அந்த நபரை ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அவரிட​மிருந்த மற்​றொரு நாட்டு வெடிகுண்​டு, அரி​வாளை போலீ​ஸார் பறி​முதல் செய்து விசா​ரித்​தனர். இதில், வெடிகுண்டு வீசிய நபர் புதுவை ரெயின்போ நகரைச் சேர்ந்த ரவீந்​திரன் என்​பது தெரிய​வந்​தது.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: ரவீந்​தரனின் மகள் பிரேம்​கு​மாரிடம் டியூசன் சென்​றுள்ளார். அவரை அழைத்துச் செல்ல வரும்போது பிரேம்​கு​மாருடன் ரவீந்​திரனின் மனை​விக்கு பழக்​கம் ஏற்​பட்​ட​தாக கரு​தி​யுள்​ளார். இதில் தகராறு ஏற்​பட்டு தற்போது அவர் மனைவி தனி​யாக வசித்து வரு​கி​றார். இந்​தப் பிரச்​சினைக்கு பின்​னரும் அவர்கள் பேசி வருவ​தாக வந்த தகவலால் பிரேம்​கு​மாரை கொலை செய்ய ரவீந்​திரன் திட்​ட​மிட்​டுள்​ளார்.

அவரே பட்​டாசுகளை வாங்கி இரு நாட்டு வெடிகுண்​டு​கள், பெட்​ரோல் குண்டு தயா​ரித்​துள்​ளார். இதில் தப்​பி​னால் வெட்ட அரி​வாள் ஒன்​றை​யும் தயா​ராக வைத்​துள்​ளார். சில நாட்​களாக டியூசன் சென்​டர் மூடும் நேரம் வரை கண்​காணித்​துள்​ளார். நேற்று முன்​தினம் இரவு மழைப் பொழி​வால் மாண​வர்​கள் சற்று தாமத​மாக சென்ற பிறகு, பிரேம்​கு​மார் மட்​டும் தனி​யாக டியூசன் சென்​டரை மூடு​வதைப் பார்த்​து, கொலை செய்ய முயன்று ரவீந்​திரனே காயமடைந்​துள்​ளார். இவ்​வாறு தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT