சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், நேற்றுமுன்தினம் தனது தோழியுடன் அண்ணாசாலையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார்.
அங்கு அவர்கள் பொருட்களை வாங்கிவிட்டு லிஃப்ட்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, லிஃப்ட்டில் நின்று கொண்டிருந்த 2 பேர் திடீரென அந்த பெண்களில் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போடுவதற்குள், லிஃப்ட்தரைத்தளத்தில் நின்றதும், இருவரும் அங்கிருந்துதப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து, அண்ணாசாலை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் (41) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.