தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
ஏரல் பகுதியில் புனித ஒத்தாசை மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பங்குத்தந்தையாக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம் (69). இந்த ஆலயத்தில் மாணவ, மாணவிகளுக்கு கீ போர்டு, பாடல், நடனம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பயிற்சிக்கு வந்த 17 வயது மாணவி ஒருவருக்கு, பாதிரியார் பன்னீர் செல்வம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார்.
அவர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், பாதிரியார் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.