க்ரைம்

ரூ.43 லட்சம் திருடிய பூம்புகார் எம்எல்ஏவின் மேலாளர், பெண் கைது

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​கார் தொகுதி எம்​எல்ஏ நிவேதா எம்​.​முரு​க​னின் இல்​லத்​தில், சிவக்​கு​மார் என்​பவர் கடந்த 10 ஆண்​டுகளாக மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், ஜூன் 16-ம் தேதி எம்​எல்ஏ மனை​வி, மேலா​ளர் சிவக்​கு​மாரிடம் ரூ.42.5 லட்​சம் பணத்தை கொடுத்து சீர்​காழி​யில் உள்ள தனது மகளிடம் கொடுக்க சொல்​லி​யுள்​ளார்.

பணத்தை இருசக்கர வாக​னத்​தில் வைத்து எடுத்​துச் சென்ற சிவக்​கு​மார், சீர்​காழி அருகே பணம் காணா​மல் போன​தாக​ தெரி​வித்​துள்​ளார். புகாரின்​பேரில், சீர்​காழி போலீ​ஸார் விசாரித்ததில் சிவகுமாரும், அவரது தோழி கவிதா என்பவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT