க்ரைம்

சென்னை | கல்லூரி மாணவி இறப்புக்கு காரணமான போலீஸ்காரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: கல்​லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கர்ப்​ப​மாக்​கி, திரு​மணம் செய்து மறுத்​த​தால் அம்​மாணவி தீக்​குளித்து இறந்​தார். இதற்கு காரண​மான போலீஸ்​காரருக்கு போக்சோ வழக்​கில் இரட்டை ஆயுள் தண்​டனை விதித்து சென்னை மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

ராணிப்​பேட்டை மாவட்​டத்​தைச் சேர்ந்த இரண்​டாம் நிலை போலீஸ்​கார​ரான மகேஷ் (33), சென்னை புழல் சிறை கண்​காணிப்​பாளரின் தனிப் பாது​காவல​ராக பணிபுரிந்து வந்​தார்.

          

கடந்த 2020-ம் ஆண்டு இவருக்​கும், வண்​ணாரப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண்​ணான கல்​லூரி மாணவி ஒரு​வருக்​கும் முகநூல் மூல​மாக பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது.

அப்​பெண்ணை காதலிப்​ப​தாக கூறிய மகேஷ், ஒரு கட்​டத்​தில் வீடியோ கால் மூல​மாக அந்த மாண​வியை ஆபாச​மாக புகைப்​படம் மற்​றும் வீடியோ எடுத்து மிரட்​டி​யுள்​ளார். பின்​னர் மாண​வியை கோவளம் பகு​தி​யில் உள்ள கடற்​கரை தங்​குமிடத்​துக்கு அழைத்​துச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

இதில் அந்த மாணவி கர்ப்​பமடைந்​துள்​ளார். பின்​னர் திரு​மணம் செய்ய மறுத்​து, கர்ப்​பத்தை கலைக்​க​வும் மகேஷ் வற்​புறுத்​தி​உள்​ளார். இதனால் மனமுடைந்த மாண​வி, கடந்த 2020 நவ.19-ம் தேதி வீட்​டில் தீக்​குளித்​தார்.

ஆபத்​தான நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், 2 நாட்​களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இறக்​கும் முன்​பாக தனது நிலை​மைக்கு மகேஷ் தான் காரணம் என வாக்​குமூலம் அளித்து இருந்​தார்.

தனது மகளின் இறப்​புக்கு காரண​மான மகேஷை கைது செய்​யக்​கோரி மாண​வி​யின் தாயார் எம்​கேபி நகர் போலீ​ஸில் புகார் அளித்​தார். ஆரம்​பத்​தில் தற்​கொலை என பதி​யப்​பட்ட இந்த வழக்கு, பின்​னர் சிபிசிஐடி போலீ​ஸாரின் விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது.

சிபிசிஐடி போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின்​கீழ் மகேஷ் மீது பாலியல் வன்​கொடுமை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை அல்​லிக்​குளம் மகளிர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி பிர​பாபர் முன்​பாக நடந்து வந்​தது.

சிபிசிஐடி போலீ​ஸார் தரப்​பில் அரசு வழக்​கறிஞர் ரவீந்​திரன் ஆஜராகி, இறந்த மாண​வி​யின் மரண வாக்​கு மூலத்தை ஆதா​ர​மாக நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தார்.

அதையடுத்து நீதிப​தி, குற்​றம் சாட்​டப்​பட்ட போலீஸ்​காரர் மகேஷூக்கு இரட்டை கடுங்​காவல் ஆயுள் தண்​டனை​யும், ரூ.1.10 லட்​சம் அபராத​மும் விதித்து தீர்ப்​பளி்த்​தார்.

மேலும், மாண​வி​யி்ன் தாயாருக்கு தமிழக அரசு ரூ.5 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும் நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT