க்ரைம்

உரிமம் இன்றி பைக் ஓட்டிய 13 வயது சிறுவன்: தாயார் மீது போலீஸார் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: 13 வயது சிறு​வன் பைக் ஓட்ட அனு​மதி அளித்த தாய் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். வாக​ன​மும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்​னை, பெரம்​பூர், மாதவரம் நெடுஞ்​சாலை​யில் 13 வயது சிறு​வன் தனது நண்​பர்​களான மேலும் 2 சிறு​வர்​களுடன் தலைகவசம் அணி​யாமல் பைக் ஓட்​டிச் சென்​றார்.

மேலும், அந்த சிறு​வன் பொது​மக்​களை அச்​சுறுத்​தும் வகை​யில், அதிவேக​மாக​வும் ஓட்​டி​னார். இதை அங்​கிருந்​தவர்​கள் வீடியோ​வாக எடுத்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டனர். இந்த வீடியோ வைரலானதோடு, கடும் விமர்​சனத்​தை​யும் ஏற்​படுத்​தி​யது.

இதுகுறித்​து, புளியந்​தோப்பு போக்​கு​வரத்து புல​னாய்வுப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர். இதில், ‘பைக்கை ஓட்​டிய சிறு​வனுக்கு 18 வயது பூர்த்​தி​யா​காத​தால், ஓட்​டுநர் உரிமம் இல்லை என்​பது தெரிய வந்​தது.

இதையறிந்​தும், வாக​னத்தை இயக்க அனு​ம​தித்த வாகன உரிமை​யாள​ரான சிறு​வனின் தாய் மீது வழக்​குப் பதிவு செய்​தனர். மேலும், சம்​பந்​தப்​பட்ட பைக்​கும் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இந்த விவ​காரம் தொடர்​பாக, சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் கூறுகை​யில், ‘`வாகன ஓட்​டிகள் அனை​வரும் போக்​கு​வரத்து மற்​றும் சாலை விதி​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும். மேலும், மனித உயிர்​களின் மதிப்பை உணர்ந்து பொறுப்​புடன் வாக​னங்​களை இயக்க வேண்​டும்.

மேலும், 18 வயது பூர்த்​தி​யடை​யாத சிறு​வர்​கள் மோட்​டார் வாக​னங்​களை ஓட்​டு​வதற்கு பெற்​றோர் அல்​லது பாது​காவலர்​கள் அனு​ம​திக்​கவோ, ஊக்​குவிக்​கவோ கூடாது’' என எச்​சரித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT