க்ரைம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவலருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​​பாளை​யங்​கோட்​டை​யில் பிளஸ் 2 மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் காவலருக்கு 23 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் உத்தரவிட்​டுள்​ளது.

திருநெல்​வேலி மாவட்​டம் களக்​காடு சிதம்​ப​ராபுரத்தை சேர்ந்​தவர் ஆனந்த கலைச்செல்​வன் (34). திருநெல்வேலி டிஐஜி அலு​வல​கத்​தில் காவல​ராகப் பணி​யாற்றி வந்தார். இவர், பாளை​யங்​கோட்டையில் உள்ள உறவினரின் மகளான பிளஸ் 2 மாண​வியை 2024-ம் ஆண்​டில் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொல்​லக்​கூ​டாது என்று அந்த மாண​வியை மிரட்​டியதுடன், சூடும் வைத்​துள்​ளார்.

          

இது தொடர்​பாக அந்த மாண​வி​யின் தாயார் பாளை​யங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்​தில் புகார் அளித்​தார். போலீஸார் விசா​ரணை நடத்தி, போக்சோ சட்டத்தின்கீழ் ஆனந்த கலைச் செல்வனை கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை நெல்​லை​யில் உள்ள போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்கை விசா​ரித்த நீதிபதி சுரேஷ்கு​மார், குற்​றம் சாட்​டப்பட்ட காவலர் ஆனந்த கலைச்செல்​வனுக்கு 23 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், ரூ.12,500 அபராத​மும் விதித்து தீர்ப்​பளித்​தார்.

ரூ.10 லட்​சம் இழப்​பீடு: மேலும், பாதிக்​கப்​பட்டமாணவிக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு தமிழக அரசுக்​கு நீதிப​தி உத்​தர​விட்​டு உள்​ளார்​.

SCROLL FOR NEXT