க்ரைம்

செஞ்சி சிறுமி 6 நாட்களாக மாயம்: 200 பேரிடம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி அருகே உள்ள நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12-ம் தேதி அதிகாலை மாயமானார். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில். சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமியை தேடும் பணி ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் தேடி வருகின்றனர்.

மூன்று செல்போன் டவர்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், வெளியூர்களிலிருந்து ஆலம்பூண்டி ஊராட்சிக்கு வந்து சென்றவர்கள் பட்டியலை தனிப்படை போலீஸார் தயாரித்தனர். அதன் அடிப்படையில் பெற்றோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT