தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலையில் நடைபெற்ற மறியல்.

 
க்ரைம்

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை: புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

வீட்டில் கழிப்பிடம் இல்லாததால் காட்டுப் பகுதிக்கு சென்ற மாணவி கொலை

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: தூத்​துக்​குடி மாவட்​டம் குளத்​தூர் அருகே பிளஸ் 2 மாணவி கொலை​யான சம்​பவத்​தில் குற்​ற​வாளி​களை கைது செய்ய வலி​யுறுத்​தி, குறுக்​குச்​சாலை, தூத்​துக்​குடி ஆகிய இரு இடங்​களில் கிராம மக்​கள், உறவினர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர். இச்​சம்​பவத்​தில் உடனடி நடவடிக்கை எடுக்​காத மகளிர் காவல் ஆய்​வாளர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார்.

குளத்​தூர் அருகே வேடநத்​தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. குறுக்​குச்​சாலை அரசு மேல்​நிலைப்​பள்​ளி​யில் 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதி வந்​தார்.

          

வேடநத்​தம் கிராமத்​தில் பல வீடு​களில் கழிப்​பிடம் இல்​லாத நிலை​யில், இயற்கை உபாதையை கழிக்க அரு​கில் உள்ள காட்​டுப்​பகு​திக்கு கடந்த 10-ம் தேதி இரவு அந்த மாணவி சென்​றார்.

அதன்​பின்​னர் அவர் வீடு திரும்​ப​வில்​லை. பெற்​றோர் உடனடி​யாக 10-ம் தேதி இரவு குளத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்க சென்​றனர். போலீ​ஸார் அவர்​களை, விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்க அறிவுறுத்​தினர்.

11-ம் தேதி காலை விளாத்​தி​ குளம் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்த போது, அங்​கும் புகாரை பெறாமல் பலமணி நேரம் அலைக்​கழிக்​கப்​பட்​டனர். இதனால், மாணவியின் தந்தை மீண்​டும்குளத்தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இந்​நிலை​யில், 11-ம் தேதி மாலை வேடநத்​தம் காட்​டுப்​பகு​தி​யில் முகத்​தில் காயங்​களு​டன் அந்த மாணவி இறந்​து கிடந்​தார்.

அதிர்ச்​சி​யடைந்த பெற்​றோரும், பொது​மக்​களும் குறுக்​குச்​சாலை - ராமேசுவரம் சாலை​யில் வேடநத்​தம் அருகே இரவு மறியலில் ஈடு​பட்​டனர். போலீ​ஸாரின் உறு​தி​மொழியை ஏற்று நேற்று அதி​காலை 1 மணி​யள​வில் மறியல் கைவிடப்​பட்​டது.

மீண்​டும் போராட்​டம்

ஆனால், நேற்று காலை​யாரும் கைது செய்​யப்​ப​டாத​தால், மதுரை - தூத்​துக்​குடி தேசிய நெடுஞ்​சாலை​யில் குறுக்​குச்​சாலை விலக்​கில் காலை 9 மணி முதல் மீண்​டும் மறியல் தொடங்​கியது. நெல்லை சரக டிஐஜி சரவணன், சார் ஆட்​சி​யர் ஹிமான்ஷூ மங்​கள், எஸ்​.பி. மதன் மற்​றும் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் உடன்​பாடு ஏற்​பட​வில்​லை.

போராட்​டத்​துக்கு அதி​முக, நாம் தமிழர், தவெக, பாஜக, புதிய தமிழகம், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சி​யினர் ஆதரவு தெரி​வித்​தனர்.

மாலை 5 மணியை கடந்​தும் போராட்​டம் நீடித்​தது. தேசிய நெடுஞ்​சாலை​யின் இரு​புற​மும் வாக​னங்​கள் அணிவகுத்து நின்​றன. போக்​கு​வரத்து மாற்று வழி​யில் திருப்பி விடப்​பட்​டது.

இதேவேளை​யில், மாணவியின் உறவினர்​களில் மற்​றொரு தரப்​பினர், மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து தூத்​துக்​குடி விவிடி சந்​திப்பு அருகே மறியலில் ஈடு​பட்​டனர்.

அவர்​களை போலீ​ஸார் தடுத்​த​தால் கடும் வாக்​கு​வாதம் மற்​றும் லேசான தள்​ளுமுள்ளு ஏற்​பட்​டது. போலீ​ஸார் பேச்​சுவார்த்தை நடத்​தி​யதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்​டனர்.

பெண் ஆய்​வாளர் சஸ்​பெண்ட் இச்​சம்​பவத்​தில் புகாரை வாங்க போலீ​ஸார் மறுத்​த​தாக எழுந்த புகார் குறித்து அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டு, நெல்லை சரக டிஐஜி​யிடம் அறிக்கை சமர்ப்​பித்​தனர். அதன்​பேரில், விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் பிர​வீ​னாவை பணி​யிடை நீக்​கம் செய்​து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டார்.

பாலியல் வன்​கொடுமை​யா?

எஸ்​.பி. விளக்​கம் தூத்​துக்​குடி எஸ்​.பி. கூறுகை​யில்​,“​கொலை​யான மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டரா என்​பது உடற்​கூ​ராய்வு அறிக்​கைக்கு பின்​னரே தெரிய வரும்.

சமூக வலை​தளங்​களில் சிறுமி​யின் புகைப்​படம் மற்​றும்​ பெயரை யாரும்​ பரப்​பக் கூடாது.‌ மீறு​வோர்​ மீது நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT