க்ரைம்

சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: கடனை வசூலிக்க முடியாத விரக்தியால் விபரீத முடிவா?

போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: சினிமா தயாரிப்​பாளர்​களுக்கு ரூ.20 கோடி வரை கடன் கொடுத்​து, அவர்​கள் திருப்​பிக் கொடுக்​காத விரக்​தி​யில் தயாரிப்​பாளர் கே.​ராஜன் தற்​கொலை செய்து கொண்​ட​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

ராஜன் மறைவுக்கு தமிழக முதல்​வர் விஜய் உட்பட பலர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். திரைப்பட உலகில் தயாரிப்​பாளர், விநி​யோகஸ்​தர், இயக்​குநர், கதாசிரியர், நடிகர் என பன்​முகத் திறமை​ வாய்ந்த கே.​ராஜன் (85) நேற்றுமுன்​தினம் சென்னை, அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். இச்சம்பவம் அனை​வரை​யும் அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது.

கே.​ராஜன் தற்​கொலைக்கு அவர் குடும்​பத்​தைப் பிரிந்து வாழ்ந்து வந்​ததும், உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்​டதும், குடும்​பத்​தினர் சொத்தை பிரித்​துக் கேட்​டதும், பண நெருக்​கடி கொடுத்​ததுமே காரணம் என தகவல் பரவியது.

ஆனால், கே.​ராஜனின் குடும்​பத்​தினர் இதை முற்​றி​லு​மாக மறுத்​தனர். அவர்​கள் கூறும்​போது, ‘‘சில கால​மாகவே கே.​ராஜன் மன உளைச்​சலில் இருந்​தார். தமிழ் திரைப்​படத் தயாரிப்பாளர்கள் பலருக்கு கடன் கொடுத்​திருந்​தார். ஆனால், அவர்​கள் பணத்தை சொன்​னபடி திருப்​பிக் கொடுக்​க​வில்​லை.

இதனால், அவருக்கு உடல்​நலக்​ குறைவு ஏற்​பட்​டது. பணத்தை பெற்ற தயாரிப்​பாளர்​களிடம் தொலைபேசி மூலம் திருப்​பிக்கேட்டு வந்​தார். ஆனால், அவர்​கள் மொத்​தம் ரூ.20 கோடி வரை கடனைத் தராமல் ஏமாற்​றி​விட்​டனர். இதனால் அவர் வேதனைப்​பட்​டார். ராஜன் யாருக்​கெல்​லாம் கடன் கொடுத்​துள்​ளார் என்​ப​தற்​கான ஆவணங்​கள் எங்​களிடம் உள்​ளன.

அவற்றை திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​திடம் ஒப்​படைத்து பணத்தை திரும்​பப்​பெற தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்​வோம்'' என்​றனர். போலீஸ் அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘கே.​ராஜன் தற்​கொலை தொடர்​பாக பல தரப்​பினரிடம் தொடர்ந்து விசா​ரித்து வரு​கிறோம்.

கடன் வாங்​கிய​வர்​கள் பணத்தை திருப்​பிக் கொடுக்க முடி​யாமல் ரவுடிகளை வைத்து மிரட்​டி​னார்​களா என்​றும் விசா​ரணை நடக்​கிறது'' என்​றனர். கே.​ராஜன் உடல் நேற்று அவரது இல்​லத்​தில் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. இறு​திச் சடங்​கு​கள் நடத்​தப்​பட்டு இன்று (19-ம் தேதி) காசிமேடு மயானத்​தில் அடக்​கம் செய்​யப்​படு​கிறது.

முதல்​வர் இரங்​கல்

தமிழ் திரைப்​படத் துறை​யின் மூத்த தயாரிப்​பாள​ரும், இயக்​குநரும், நடிகரும், விநி​யோகிப்​பாள​ரு​மான கே.​ராஜன் மறைவுற்ற செய்​தி​யறிந்து மிகுந்த வேதனை அடைந்​தேன்.

திரைத்​துறை​யின் நலன், குறிப்​பாக, சிறு திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் மற்​றும் விநி​யோகிப்​பாளர்​களின் உரிமை​கள், தமிழ் சினி​மா​வின் போக்கு குறித்து தொடர்ந்து துணிச்​சலுடன் தனது கருத்​துகளை வெளிப்​படுத்தி யவர் கே.​ராஜன்.

அவரது பங்​களிப்பை திரைத்​துறை என்றும் நினை​வில் வைத்​திருக்​கும். ராஜனை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்​கும், திரைத்​துறை​யினருக்​கும்​ எனது இரங்கலை தெரி​வித்​துக்​ கொள்கிறேன்​.

SCROLL FOR NEXT