வெள்​ளைக்​காளி

 
க்ரைம்

புழல் மத்திய சிறையில் பிரபல ரவுடியை கொல்ல திட்டம்: திட்டமிட்ட 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

புழல்: புழல் மத்​திய சிறை​யில் தண்​டனை கைதி​யாக பிரபல ரவுடி வெள்​ளைக்​காளி அடைக்​கப்​பட்​டுள்​ளார். அதே சிறை​யில் தஞ்​சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணி​கண்​ட​னும் தண்​டனை கைதி​யாக இருந்து வந்​தார்.

இந்த நிலை​யில், வெள்​ளைக்​காளியை கொலை செய்ய ரூ.1 கோடி பேரம் பேசப்​பட்​டு, அதில் முன்​பண​மாக ரூ.25 லட்​சம் பெற்​றுக் கொண்​டு, 3 தண்​டனை கைதி​களு​டன் இணைந்து லாலி மணி​கண்​டன் சதித்​திட்​டம் தீட்​டிய​தாக சிறைத்​துறைக்கு தகவல் கிடைத்​துள்​ளது.

ஞாயிற்​றுக்​கிழமையன்று சிறைக்​குள் ஆள் நடமாட்​டம் குறை​வாக இருக்​கும் நேரத்தை பயன்​படுத்தி வெள்​ளைக்​காளியை கொலை செய்ய திட்​ட​மிட்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்த தகவல் நேற்று மாலை சிறைத்​துறை புல​னாய்வு பிரி​வினருக்கு கிடைத்​ததைத் தொடர்ந்​து, சந்​தேகத்​துக்​குரிய 4 பேரை​யும் தனித்​தனி​யாக பிடித்து விசா​ரணை நடத்​தினர். அந்த விசா​ரணை​யில் கொலை சதி தொடர்​பான தகவல்​கள் உறு​தி​யான​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, பாது​காப்பு காரணங்​களுக்​காக லாலி மணி​கண்​டன் சேலம் மத்​திய சிறைக்கு மாற்​றப்​பட்​டார். அவருடன் சதித்​திட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படும் 3 தண்​டனை கைதி​கள் கடலூர் மத்​திய சிறைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

கொலை சதி முறியடிப்பு சிறைத்​துறை புல​னாய்வு பிரி​வினரின் விரை​வான நடவடிக்​கை​யால், சென்னை புழல் மத்​திய சிறைக்​குள் அரங்​கேற இருந்த கொலைச் சதி முறியடிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT