மருத்துவமனைக்குள் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணன்.

 
க்ரைம்

தாய் மீது வாகனத்தை மோதியவரை கைது செய்யாததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் கத்தியுடன் புகுந்து மாற்றுத்திறனாளி ரகளை

செய்திப்பிரிவு

சிவகங்கை: ​தாய் மீது வாக​னத்தை மோதி விபத்தை ஏற்​படுத்​தி​ய​வரை கைது செய்​யாததால் கத்​தி​யுடன் சிவகங்கை அரசு மருத்​து​வ​மனைக்​குள் புகுந்து மாற்​றுத்​திற​னாளி ரகளை​யில் ஈடு​பட்​டார்.

சிவகங்கை அருகே அரசனி​முத்​துப்​பட்டி நைனாங்​குளத்​தை சேர்ந்த மலை​யாண்டி மகன் பால​கிருஷ்ணன். அவரது தாயார் மல்​லி​கா, கடந்த ஆக. 25-ம் தேதி பொன்​னாகுளம் பகு​தி​யில் அடை​யாளம் தெரி​யாத வாக​னம் மோதி​ய​தில் காயமடைந்​தார். அவர் சிவகங்கை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீ​ஸார் விசா​ரித்து வரும் நிலை​யில், விபத்து ஏற்​படுத்​திய வாகன ஓட்​டுநரை கண்டறிய​வில்லை என்று கூறப்​படுகிறது.

இதனால் ஆத்​திரமடைந்த பால​கிருஷ்ணன் நேற்று முன்​தினம் இரவு தனது தாயார் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை அரசு மருத்​து​வ​மனை வார்​டுக்கு வந்​து, தான் வைத்​திருந்த கத்​தியை காட்​டி, குற்​ற​வாளியை பிடிக்க முடி​யாத காவல்​துறை எதற்​கு எத்​தனை நாட்​கள்​தான் எனது தாயாருக்கு சிகிச்சை அளிக்​கிறீர்​கள் என்று கூச்​சலிட்டு ரகளை​யில் ஈடு​பட்​டார்.

இதைப் பார்த்த நோயாளி​கள், பணி​யாளர்​கள் அலறினர். அங்கு வந்த புறக்​காவல்​நிலைய போலீ​ஸார் பால​கிருஷ்ணனை சமரசப்​படுத்தி அங்​கிருந்த அழைத்​துச் சென்​றனர். தொடர்ந்து மருத்​து​வ​மனை பணி​யாளர்​களை பணி செய்​ய​வி​டா​மல் தடுத்ததாக ஆர்எம்ஓ முகமதுரபீக் அளித்த புகாரின்​பேரில் பால​கிருஷ்ணனை கைது போலீஸார் செய்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், விபத்து நடந்த இடத்​தில் சிசிடிவி கேமரா இல்​லாததால் வாக​னத்தை கண்​டறிவ​தில் தாமதம் ஏற்​படு​கிறது. அதற்​குள் கத்​தியை காட்டி நோயாளி​களிடம் பீதியை ஏற்​படுத்​தி​ய​தால் அவரை கைது செய்​தோம் என்றனர்.

SCROLL FOR NEXT