க்ரைம்

தனியார் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​பெரம்​பூர் பேப்​பர் மில்ஸ் சாலை பகு​தியை சேர்ந்தவர் சுகன்யா லட்​சுமி (36). இவரது மகள் படித்து வரும் தனி​யார் பள்​ளி​யின் ஆசிரியர் ஒரு​வர், அவரது மகனுக்கு தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​யில் பணம் கொடுத்து சீட்டு வாங்கி தந்து உதவு​மாறு சுகன்​யா​விடம் கேட்​டுள்​ளார்.

இதையடுத்​து, உறவினர்​கள் மூலம் அறி​முக​மான சக்தி என்​பவரை சுகன்யா அணுகி​ய ​போது, தனி​யார் பொறி​யியல் கல்லூரியில் சீட்டு வாங்கி தரு​வ​தாக அவர் கூறி​யுள்​ளார்.

இதை நம்​பிய சுகன்யா அவரிடம் ரூ.5.08 லட்​சம் கொடுத்துள்​ளார். பணத்தை பெற்​றுக் கொண்ட சக்​தி,கல்​லூரி​யில் சீட்டு வாங்​கித் த​ரா

மல் ஏமாற்றி வந்​தார். இதையடுத்து, சுகன்​யா, அவரிடம் பணத்தை திருப்பி கொடுக்​கு​மாறு கேட்​டும், சக்தி பணத்தை திருப்பி கொடுக்​காமல் இழுத்​தடித்து வந்​தார்.

இதனால், கல்​லூரி​யில் சீட் வாங்கி தரு​வ​தாக கூறி ஏமாற்​றிய சக்தி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரு​மாறு, சுகன்யா லட்​சுமி திருவிக நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதனடிப்​படை​யில், போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி, கரை​யான்​சாவடி, சென்​னீர்​குப்​பம் பகு​தியை சேர்ந்த சக்​தியை (27), கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT