க்ரைம்

சென்னை | சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு மயி​லாப்​பூரில் உள்ள தனது தாத்தா வீட்​டுக்கு தாயாருடன் வந்த 9 வயது சிறுமி, வீட்​டுக்கு வெளியே விளை​யாடிக் கொண்டு இருந்​துள்​ளார்.

அப்​போது அரு​கில் வசித்த திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்​த​வாசி​யைச் சேர்நத பாபு(60) என்ற முதி​ய​வர், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக மயி​லாப்​பூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து அவரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ். பத்மா முன்​பாக நடந்​தது. அரசு தரப்​பில் சிறப்பு குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்​.அனிதா ஆஜராகி வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி, குற்​றம் சாட்​டப்​பட்ட பாபு-வுக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​துள்​ளார். மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்க நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT