சென்னை: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மனோகர் (60) என்பவர் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசை தேர்வு செய்துள்ளார்.
அதற்கான தொகையை காசோலை மூலம் செலுத்துவதாகக் கூறி, வங்கிக் கணக்கு விவரத்தை பெற்றுச் சென்றார்.
மறுநாள் மீண்டும் கடைக்கு வந்த மனோகர், பணத்தை காசோலை மூலம் செலுத்திவிட்டதாகக் கூறி, வங்கி அனுப்பிய குறுஞ்செய்தியை காண்பித்துள்ளார்.
இதை நம்பிய கடை ஊழியர்கள், ரூ.29,250 மதிப்புள்ள வெள்ளிக் கொலுசை அவரிடம் வழங்கியுள்ளனர்.
ஆனால் அன்று மாலை கடையின் வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது, மனோகரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அவரது காசோலை திரும்பியது தெரியவந்தது.
இதேபோன்று, கடந்த அக்.26-ம் தேதி, தி.நகரில் உள்ள துணிக்கடையில் ரூ.81,950 மதிப்புள்ள பட்டுப் புடவையை வாங்கிஉள்ளார்.
புகார்களின் அடிப்படையில் பாண்டி பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தி.நகர், ராமகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தமனோகரை கைது செய்தனர். ரூ.1.11 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசு மற்றும் பட்டுப் புடவையை அவரிடமிருந்து மீட்டனர்.