திருச்சி அரசு மருத்துவமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் எஸ்.ரமேஷ். உடன் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.ரவிசங்கர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள். (உள்படம்) உயிரிழந்த சீதாலட்சுமி.படம்: ர.செல்வமுத்துகுமார்

 
க்ரைம்

திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவி திடீர் உயிரிழப்பு

தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள், சக மாணவிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் அறுவை சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி திடீரென உயி​ரிழந்​தார். தவறான சிகிச்​சை​யால் அவர் உயி​ரிழந்​த​தாக புகார் தெரி​வித்து உறவினர்​கள், சக மாணவி​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களு​டன் அமைச்​சர் ரமேஷ் பேச்​சு​வார்த்தை நடத்தி சமா​தானப்​படுத்​தி​னார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் குளத்​தூர் வட்​டம் மணக்​குடிப்​பட்​டியைச் சேர்ந்​தவர் சேட்​டு. விவ​சாய தொழிலா​ளி. இவரது மகள் சீதாலட்​சுமி(19), திருச்சி கிஆபெ விஸ்​வ​நாதம் அரசு மருத்​து​வக் கல்​லூரி நிர்​வாகத்​தின் கீழ் இயங்கி வரும் அரசு செவிலியர் பயிற்​சிப் பள்​ளி​யில் 3-ம் ஆண்டு டிப்​ளமோ படிப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில், மூக்​கில் வளர்ந்​திருந்த சதை பிரச்​சினைக்​காக சீதாலட்​சுமி திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்ந்​தார். இதையடுத்து அவருக்கு நேற்று முன்​தினம் அறுவை சிகிச்சை செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. இதற்​காக அவருக்கு மயக்க மருந்து செலுத்​தி​ய​போது படபடப்பு அதி​க​மாகி​யுள்​ளது. இதனால், மயக்​கநிலை​யில் இருந்து மீட்​டெடுக்​கும் முயற்​சி​யில் மருத்​து​வர்​கள் ஈடு​பட்​டும், பலனின்றி அன்று இரவு சீதாலட்​சுமி உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் தான் சீதாலட்​சுமி​ உயி​ரிழந்​த​தாக புகார் தெரி​வித்து அவரது பெற்​றோர், உறவினர்​கள், சக மாணவி​கள் திருச்சி அரசு மருத்​து​வ​மனை முன்பு நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். 2 மணி நேரத்​துக்​கும் மேலாக போராட்​டம் நீடித்த நிலை​யில், அவர்​களிடம் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் உடன்​பாடு ஏற்​பட​வில்​லை.

தகவலறிந்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ், மத்​திய மண்டல ஜ.ஜி. பால​கிருஷ்ணன், சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் எம்​.ர​விசங்​கர், ஆட்​சி​யர் வே.சர​வணன் உள்​ளிட்​டோர் அங்கு சென்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்க அரசு குழு அமைத்​துள்​ள​தாக அமைச்​சர் ரமேஷ் தெரி​வித்​தார். இதையடுத்​து, அவர்​கள் மறியலை கைவிட்​டு, மருத்​து​வ​மனை வளாகத்​துக்​குள் போராட்​டத்​தில் ஈடு​பட்டனர்.

பின்​னர், அமைச்​சர் ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இந்த சம்​பவம் தொடர்​பாக தற்​காலிக நடவடிக்கை எடுக்க ஆட்​சி​யருக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. முதல்​வர், சுகா​தா​ரத் துறை அமைச்​சரின் அறி​வுறுத்​தலின் பேரில் சிறப்பு விசா​ரணைக் குழு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. அந்​தக் குழுவின் விசா​ரணை​யில் மருத்​து​வர்​கள் மீது தவறு இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.

உயர்​மட்ட குழு அமைப்பு: இந்த சம்​பவம் தொடர்​பாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் திருச்​செங்​கோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலியர் பயிற்சி மாணவி உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை கண்​காணிப்​பாளர் பாஸ்​கர் தலை​மை​யில் 4 மருத்​து​வர்​கள் கொண்ட உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அக்​குழு​வினர் திருச்​சிக்கு விரைந்​துள்​ளனர். அவர்​கள் விசா​ரணை நடத்தி அறிக்கை வழங்​கு​வர். அதன் அடிப்​படை​யில் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

மக்​கள் பிர​தி​நி​தி​கள் தவிர மற்ற யாரும் மருத்​து​வ​மனை​களில் ஆய்வு நடத்​தக்​கூ​டாது. போலீ​ஸாரை சுதந்​திர​மாக செயல்​பட​விட்​டாலே குற்​றங்​கள் குறைந்​து​விடும். முன்பு இருந்த அரசில் அரசி​யல் தலை​யீடு அதி​க​மாக இருந்​தது. ஆனால், இப்​போது அது​போல் இல்​லை. எங்கு குறை இருந்​தா​லும் சரி செய்ய அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொள்​வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்​.

ஆட்சியரிடம் முறையீடு: போராட்டத்தில் ஈடுபட்ட செவிலிய மாணவிகளில் 15 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சரவணனை சந்தித்து, ‘உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு,குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மயக்கவியல் மருத்துவரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செவிலிய மாணவிகள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT