க்ரைம்

புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய செவிலியர் உதவியாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: புழல் மத்​திய சிறைக்​குள் கஞ்​சாவை மறைத்து கடத்​திச் சென்ற செவி​லியர் உதவியாளர் கைது செய்யப்பட்​டார். சென்னை புழல் சிறை ஊழியர் குடி​யிருப்​பைச் சேர்ந்​தவர் கனக​ராஜ் (51).

இவர் புழல் மத்​திய சிறை​யில் உள்ள விசா​ரணைக் கைதி​கள் சிறை​யின் மருத்​து​வ​மனை​யில் ஆண் செவி​லியர் உதவியாளராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மாலை கனக​ராஜ் வழக்​கம்​போல் சிறைக்​குள் பணிக்​குச் செல்​வதற்​காக வந்​தார்.

அப்​போது நுழைவாயி​லில் பாது​காப்​புப் பணி​யில் இருந்த சிறைக் காவலர்​கள் அவரை சோதனை செய்​தனர். அப்​போது கனக​ராஜ் தனது உள்​ளாடைக்​குள் ஒரு பார்​சலை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

உடனே சிறைக் காவலர்​கள் அந்த பார்​சலை பறி​முதல் செய்து திறந்து பார்த்​தனர். அதில் 313 கிராம் கஞ்சா, ஒரு வாசனை திர​விய பாட்​டில் ஆகியவை இருந்​தன. இதனால் அதிர்ச்​சி​யடைந்த சிறைக் காவலர்​கள் கனக​ராஜை பிடித்து புழல் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில், காவாங்​கரை பேருந்து நிறுத்​தம் அருகே வைத்து மர்ம நபர் ஒரு​வர் கனக​ராஜிடம் அந்த பார்​சலை கொடுத்து, புழல் மத்​திய சிறை​யில் உள்ள விசா​ரணைக் கைதி​கள் சிறை​யின் பிளாக் 4-ல் இருக்​கும் சில கைதி​களிடம் ஒப்​படைக்​குமாறு கூறிய​தாகத் தெரிய​வந்தது.

இதையடுத்து சிறைக்​குள் கஞ்​சாவை கடத்​திக் கொடுக்க முயன்​றதன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார்? பார்​சலை கொடுத்த நபர் யார்? சிறைக்​குள் உள்ள கைதி​களுக்கு கஞ்சா வழங்க எவ்​வளவு பணம் கைமாறியது? இந்த கடத்​தல் சம்​பவத்​தில் வேறு யாருக்​காவது தொடர்பு உள்​ளதா என்​பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT