க்ரைம்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கொலை: டெலிவரி நிறுவன ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட மோதலில் இளைஞர் ஒரு​வர் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். இதுதொடர்​பாக டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை மாதவரம் கணேஷ் நகரைச் சேர்ந்​தவர் அரி (46). கூலி வேலை செய்து வந்​த இவர் நேற்று முன்​தினம் இரவு மது​போதை​யில் வீட்​டுக்கு சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, அதே பகு​தி​யில் உள்ள சிவன் கோவில் மைதானம் அருகே அதே பகு​தி​யைச் சேர்ந்த தனி​யார் டெலிவரி நிறுவன ஊழியர் ஏசுபாதம் என்ற விக்கி (27) என்​பவரை சந்​தித்​தார். இரு​வருக்​கும் இடையே திடீரென தகராறு ஏற்​பட்​டது. பின்​னர் இரு​வரும் அங்​கிருந்து சென்​றனர்.

ஆனால், போதை தெளி​யாத அரி மீண்​டும் ஆத்​திரம் அடைந்​து, வீட்​டில் இருந்த காய்​கறி நறுக்​கும் கத்​தியை எடுத்​துக்​கொண்டு ஏசுபாதத்தை தேடி மைதானம் அருகே வந்​துள்​ளார். அங்கு இரு​வருக்​கும் மீண்​டும் தகராறு ஏற்​பட்​டது.

இதில் அரி ஏசு​பாதத்தை கத்​தி​யால் குத்தி உள்​ளார். அவர் கத்​தியை பிடுங்கி அரியை தாக்கி உள்​ளார். இதில், பலத்த காயமடைந்த அரி அங்​கேயே மயங்​கி​னார்.

தகவல் அறிந்த மாதவரம் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து படு​காயமடைந்த அரியை மீட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

சம்​பவத்​துக்கு பின்​னர் ஏசுபாதம் அங்​கிருந்து தப்​பிச்​சென்​றார். இதையடுத்து மாதவரம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து அவரைக் கைது செய்​தனர். தொடர்ந்து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT