க்ரைம்

கோவையில் 35 நாட்களில் 10 கொலைகள் - தொழில் நகரில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்​டத்​தில் கடந்த 35 நாட்​களில் 10 கொலைகள் நடந்​திருப்​பது பொது​மக்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

கோவை சிங்​காநல்​லூரை சேர்ந்​தவர் குரு​நாதன். இவருக்கு சொந்த​மாக பாப்​பம்​பட்டி நந்​தினி நகரில் உள்ள இடத்​தில், தகரக்கொட்​டகை அமைக்​கும் பணியை கடந்த சில நாட்​களாக மேற்​கொண்டு வந்​தார். நேற்று இடத்தை பார்​வை​யிட சென்றபோது, அங்கு சுமார் 40 வயது மதிக்​கத்​தக்க நபர் தலையில் காயம்​பட்ட நிலை​யில் உயி​ரிழந்து கிடந்​தார்.

சூலூர் போலீ​ஸார் சடலத்தை கைப்​பற்றி விசா​ரித்​தனர். இறந்து கிடந்​தவரின் கையில் ராமேஸ்​வர் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. வட மாநிலத்​தவரை போல காணப்​படும் அவரை மர்ம நபர்கள் கொலை செய்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரிவித்​தனர்.

கோவை மாநகர் மற்​றும் புறநகர் பகு​தி​களில் சமீபகால​மாக கொலை சம்​பவங்​கள் அதி​கரித்​துள்​ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்​கள் கூறுகை​யில், “கோவை கொலை நகர​மாக மாறுவதை ஏற்க முடி​யாது. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி பீளமேடு பகுதி​யில் சென்​னையை சேர்ந்த இளைஞர் நவீன் ​(25) கொலை செய்​யப்​பட்​டார்.

6-ம் தேதி கிணத்​துக்​கடவு பகு​தி​யில் அஸ்​வின் (22) என்ற இளைஞர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டு, அதனை இளம் சகோதரர்கள் செல்ஃபி மற்​றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதி​விட்டனர். கோவை தனி​யார் கல்​லூரி மாணவர் அமுதன் (19) சகமாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். சுமார் 35 நாட்களில் 10 கொலை​கள் நடந்​திருப்பது அதிர்ச்சி அளிக்​கிறது” என்றனர்.

தொழில்​துறை​யினர் கூறும்​போது, “கோவை என்​றால் அமைதியான தொழில்​நகரம் என்​பது​தான் அடை​யாளம். அந்த அடை​யாளத்தை இழக்​கும் அளவுக்கு கொலை​கள் நடந்து வரு​வது எதிர்​காலத்​தில் தொழில்​துறையை நிச்​ச​யம் பாதிக்​கும். தொழில் நகரத்​தில் தனி​நபர் பாது​காப்பு மிக அவசி​யம். அதில் மாநகர் மற்றும் மாவட்ட போலீ​ஸார் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும்.

ஆட்​கள் நடமாட்​டம் குறை​வான பகு​தி​களில், போலீ​ஸார் ரோந்து பணி​களை விரைவுபடுத்​து​வதுடன், வடமாநிலத் தொழி​லா​ளர்​கள் அதி​கம் வாழும் இடங்​களில் அவர்​களது விவரங்​களை நிறுவனங்கள் முழு​மை​யாக பெற்று ஆவணம் செய்து வைத்திருக்க வேண்​டிய அவசி​யத்​தை​யும் இச்​சம்​பவங்​கள் உணர்த்​துகின்​றன. இதற்கு தொழில்​துறை​யினரும் ஒத்​துழைப்பு தரவேண்​டும்” என்​றனர்.

SCROLL FOR NEXT