கொல்லப்பட்ட சஞ்சய்

 
க்ரைம்

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை: கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் பயங்கரம்

பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: ​​காதல் விவ​காரத்​தில் கோவில்​பட்டி பேருந்து நிலை​யத்​தில் கத்​தி​யால் குத்தி இளைஞர் கொலை செய்​யப்​பட்​டார். பெண்​ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளத்​தைச் சேர்ந்த மாணிக்​கம் மகன் சஞ்​சய் (19). இவரும், கெச்​சிலாபுரத்​தைச் சேர்ந்த குமார் என்​பவரின் 17 வயது மகளும் காதலித்து வந்​துள்​ளனர். இதை விரும்​பாத குமார், தனது மகளை கோவில்​பட்டியில் உள்ள தனது தம்பி மாரி​முத்து வீட்​டுக்கு அனுப்பி வைத்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சஞ்​சய் தனது நண்​பர்​களு​டன் சென்னை புறப்​பட்​டார். இதற்​காக அவர்​கள் கோவில்​பட்டி புதிய கூடு​தல் பேருந்து நிலை​யம் வந்தனர். அப்போது குமார், அவரது மகள், அவரது சகோ​தரர் மாரி​முத்​து, உறவினர் சங்கர நாராயணன் உள்ளிட்ட 5 பேர் அங்கு வந்​துள்​ளனர். ஆண்கள் மட்​டும் சஞ்​சய்யை தனி​யாக அழைத்​துச் சென்று பேசி​யுள்​ளனர்.

அப்​போது அவர்​களுக்​குள் தகராறு ஏற்​பட்​டு 3 பேரும் சஞ்​சய்யை கத்​தி​யால் குத்​தி​யுள்​ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்​தார். அப்​போது எதிர்​பா​ராமல் கத்தி பட்டு மாரி​முத்​து​வும் காயமானார்.

கோவில்​பட்டி மேற்கு போலீ​ஸார் விரைந்து சென்​று, காயமடைந்த சஞ்​சய் மற்​றும் மாரி​முத்து ஆகியோரை மீட்டு சிகிச்​சைக்​காக கோவில்​பட்டி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். மேல் சிகிச்​சைக்​காக திருநெல்​வேலி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சஞ்சய் உயி​ரிழந்​தார்.

திரு​மணம் செய்து வைப்​ப​தாகக் கூறி ஏமாற்​றி, அப்​பெண்​ணையே சஞ்​சய்​யிடம் பேச வைத்​து அவரை பேருந்து நிலையத்தில் வைத்து கொலை செய்​துள்​ளனர் என போலீஸ் வி​சாரணையில்​ தெரியவந்​துள்​ளது. கு​மார்​, ​மாரிமுத்​து, சங்​கர​நா​ராயணன்​ ஆகியோரை போலீஸார்​ கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT