க்ரைம்

மதுரை: மகனின் தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வீடியோ வெளியிட்ட தாய்

செய்திப்பிரிவு

மதுரை: திருமங்கலம் அருகே மகன் தற்கொலைக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள பெரியமறவன்குளத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.

இவரது மனைவி காமுத்தாய். தூய்மைப் பணியாளரான இவரது மகன் அழகுப்பாண்டி (23). கடந்த 16-ம் தேதி கழிப்பிடம் சென்று வருவதாகக் கூறி வெளியே சென்றவர் இரவு 8 மணிக்கு பதற்றத்துடன் வீடு திரும்பினார்.

அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அழகுப்பாண்டியை கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துச் சென்றது. இந்நிலையில் அன்றிரவு வீட்டில் அழகுப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து அவரது தாயார் காமுத்தாய் கொடுத்த புகாரில், ‘குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிரட்டியதால் தனது ஒரே மகன் தற்கொலை செய்துகொண்டார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கார்த்திக், கமலக்கண்ணன், யோகேஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, காமுத்தாய் நேற்று தனது மகன் தற்கொலைக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT