க்ரைம்

தஞ்சாவூரில் ரூ.5 கோடி கைமாறிய விவகாரம்: காவல் ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம்

வீடியோ வெளியானதால் மீண்டும் சர்ச்சை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தனியார் மருத்​து​வ​மனை விவகாரத்​தில் ரூ.5 கோடி பணம் கைமாறியது தொடர்​பான வீடியோ வெளியாகி இருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தஞ்​சாவூர் நம்​பர் 1 வல்​லம் சாலை​யில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யின் நிர்​வாக இயக்​குநராக ஆர்.எம்.பாஸ்கரன், இயக்​குநராக சரவணன், பங்​குதா​ரராக ஜெய ராமசாமி ஆகியோர் இருந்​தனர். இதில் பங்​குதா​ரருக்​கும், நிர்​வாக இயக்​குநருக்​கும் இடையே ஏற்​பட்ட பிரச்​சினை​யில், இரு தரப்​பினரும் தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இந்த புகாரின் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர்.

இந்த நிலை​யில் காவல் துறை​யின் உயர் அதி​காரி ஒரு​வர் அறி​வுறுத்​தலின்​பேரில், தஞ்​சாவூர் குற்​றப்​பி​ரிவு ஆய்​வாளர் சுகுமாறன் முன்​னிலை​யில் அவரது வீட்​டில் இரு தரப்​பினருக்​கும் இடையே பேச்சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில், பங்​குதா​ரர் ஜெயஸ்ரீக்கு மருத்​து​வ​மனை நிர்​வாகம் ரூ.24 கோடி கொடுப்​ப​தாக ஒப்​பந்​தம் செய்து கொண்​ட​தாகவும், முதற்​கட்​ட​மாக ரூ.5 கோடியை சரவணன் தரப்​பினர் கொண்டு வந்​திருந்​த​தாகவும் கூறப்​படு​கிறது. இதை அப்​போது இரு தரப்​பினரும் செல்​போன்​களில் வீடியோவாக பதிவு செய்து கொண்​டனர்.

இந்த நிலை​யில் சுகுமாறனின் வீட்​டில் இருந்து ஜெயஸ்ரீக்கு கொடுப்​ப​தாக கூறி வாங்​கப்​பட்ட பணம் உரிய நேரத்​தில் அவர்​களுக்கு கிடைக்​க​வில்லை எனக் கூறி, சரவணனிடம் மீண்​டும் ஜெய தரப்​பினர் நெருக்​கடி கொடுத்​த​தாக தெரி​கிறது.

இது​குறித்து தமிழக டிஜி​பிக்கு சரவணன் புகார் அளித்​ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபி​சிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. பின்​னர், தஞ்​சாவூர் குற்​றப்​பி​ரிவு ஆய்​வாளர் சுகுமாறன் ரூ.5 கோடி பெற்​றதாக கூறி, சிபி​சிஐடி போலீ​ஸார் கடந்த அக்.9-ம் தேதி அவரை கைது செய்​தனர். அந்த வழக்கை நேற்று முன்​தினம் விசா​ரித்த உயர் நீதி​மன்​றத்​தின் மதுரை கிளை, சுகுமாறன் கைது செய்​யப்​பட்​டது சட்ட விரோதம் எனக் கூறி, அவரை விடுவிக்க உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், பேச்சுவார்த்தையின்போது சுகுமாறன் வீட்​டில் பணம் கட்​டுகட்​டாக இருக்​கும் வீடியோ நேற்று சமூக வலை​தளங்​களில் வெளியானது. இது இந்த வழக்​கில் மீண்​டும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT