உள்படம்: மாயழகன்

 
க்ரைம்

ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்தி ஏமாந்தவர் தற்கொலை: நத்தம் அருகே உறவினர்கள் மறியல்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி நேற்று தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள், நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவரது உடலை வைத்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், கிராம மக்கள் ஆன்லைன் செயலி மூலம் ஆயிரங்கள், லட்சங்கள் என தங்கள் தகுதிக்கு மீறி பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

இதன்மூலம், கோடிக்கணக்கில் மக்களின் பணம் பறிபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்த விவசாயியான கும்பகோணம் மகன் ராஜ் என்ற மாயழகன் (25) மற்றும் அவரது குடும்பத்தினர் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்திருந்த தாகக் கூறப்படுகிறது.

பணத்தை இழந்த துக்கம் தாங்காமல் மாயழகன் நேற்று தோட்டத் தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலுடன் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வத்திபட்டி பிரிவு அருகே நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் நத்தம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன் பாடு ஏற்படவில்லை. அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார், மதுரை மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின் னர், அவர்களை கலைந்து போகச் செய்தனர். திண்டுக்கல் டிஐஜி சசிமோகன் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். மாயழகனின் உடல் திண்டுக் கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் நத்தம் - மதுரை சாலை யில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT