க்ரைம்

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இரு பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றவர் கொலை

செய்திப்பிரிவு

ஊத்​துக்​கோட்டை: பெரிய​பாளை​யம் அருகே வீட்​டில் தனி​யாக இருந்த 2 பெண்​களிடம் அத்​து​மீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர், பெண்​களின் உறவினர்​கள், பொது​மக்​களால் அடித்​து கொலை செய்​யப்​பட்டார்.

இது தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்பட்டுள்ளனர். வேலை தேடி சமீபத்​தில் தமிழகம் வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த பிரசன்​ஜித் தாஸ் (35) உள்​ளிட்ட 6 இளைஞர்​கள், திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே வெள்​ளியூர் கிராமத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரிவதற்​காக நேற்று முன்​தினம் வந்​தனர்.

இவர்​கள், வெள்​ளியூர் அருகே அமணப்​பாக்​கம் கிராமத்​தில் தங்க வைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று முன் தினம் மாலை பிரசன்​ஜித் தாஸ் மது அருந்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. ​போதை அதி​க​மான​தால் அவர், அமணப்​பாக்​கம் பகு​தி​யில் சுற்​றித் திரிந்​துள்​ளார்.

மேலும், அமணப்​பாக்​கம் அரு​கில் உள்ள ராம​ராஜ கண்​டிகை கிராமத்​தில் ஒரு வீட்​டுக்​குள் புகுந்​து, அங்கு தனி​யாக இருந்த இரு பெண்களிடம் அத்​து​மீறலில் ஈடுபட முயன்​றுள்​ளார்.

அதிர்ச்​சி​யடைந்த பெண்​கள் கூச்​சலிட்​டதையடுத்​து, பெண்​களின் தந்தை, உறவினர்​கள், பொது​மக்​கள், பிரசன்​ஜித் தாஸை பிடித்​து, கை,​கால்​களை கட்டி தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இதில், படு​காயமடைந்​து, மயங்கி கீழே விழுந்த பிரசன்​ஜித் தாஸ் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்​து, தகவலறிந்த ஊத்​துக்​கோட்டை துணை காவல் கண்​காணிப்​பாளர் ராஜா, வெங்​கல் காவல் ஆய்​வாளர் முரளி மற்​றும் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, பிரசன்​ஜித் தாஸ் உடலை மீட்​டு, பிரேத பரிசோதனைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதைத் தொடர்ந்​து, வழக்​குப் பதிவு செய்த வெங்​கல் போலீ​ஸார், பிரசன்​ஜித் தாஸ் கொலை செய்​யப்​பட்​டது தொடர்​பாக, இரு பெண்​களின் தந்தை ரவி (55), சித்​தப்பா சிவகு​மார் (45), உறவினர் ஜெயக்​கு​மார்​(28) ஆகிய 3 பேரை நேற்​று போலீ​ஸார்​ கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT