க்ரைம்

‘துரோகத்​தின் சம்​பளம் மரணம்’ - கோவையில் மனைவியை கொன்று ‘வாட்ஸ்அப் ஸ்டேடஸ்’ வைத்த கணவர் கைது

செய்திப்பிரிவு

கோவை: நெல்லை மேலப்​பாளை​யம் அரு​கே​யுள்ள தரு​வையைச் சேர்ந்​தவர் பால​முரு​கன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (32). இவர்​களுக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். தம்​ப​தி​யிடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்டு வந்த நிலை​யில், கணவர், குழந்​தைகளை பிரிந்த ஸ்ரீபிரி​யா, கோவை காந்​திபுரம் கிராஸ் ​கட் சாலை​யில் உள்ள பெண்​கள் தங்​கும் விடு​தி​யில் தங்​கி, டவுன்​ஹால் பகு​தி​யில் உள்ள துணிக்​கடை​யில் பணிபுரிந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று காலை கோவை வந்த பால​முரு​கன், ஸ்ரீபிரியா தங்​கி​யிருந்த விடு​திக்​குச் சென்​று, அவரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். திடீரென பால​முரு​கன் அரி​வாளால் ஸ்ரீபிரி​யாவை வெட்​டிக் கொலை செய்​தார்.

பின்​னர், அங்​கிருந்த நாற்​காலி​யில் அமர்ந்து கொண்டு, மனை​வி​யின் உடலைப் புகைப்​படம் எடுத்து ‘துரோகத்​தின் சம்​பளம் மரணம்’ என்ற வாசகத்​துடன் வாட்​ஸ்​அப் ஸ்டேடஸ் வைத்​துள்​ளார். தகவலறிந்த ரத்​தினபுரி போலீ​ஸார் ஸ்ரீபிரி​யா​வின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

மேலும், பால​முரு​க​னைக் கைது செய்​தனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “ஸ்ரீபிரி​யா​வின் நடத்​தை​யில் சந்​தேகமடைந்த பால​முரு​கன், ஆத்​திரத்​தில் அவரைக் கொலை செய்​துள்​ளார். தொடர்ந்து விசா​ரணை நடத்​தி வரு​கிறோம்​” என்​றனர்​.

SCROLL FOR NEXT