க்ரைம்

அருப்புக்கோட்டை: மனைவி, கட்டிட தொழிலாளியை கொன்ற இளைஞர் கைது

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: மனைவியையும், அவருடன் இருந்த கட்​டித் தொழிலா​ளியையும் வெட்​டிக் கொலை செய்த இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

விருதுநகர் மாவட்​டம் அருப்​புக்​கோட்டை அருகே பாலை​யம்​பட்​டியைச் சேர்ந்​தவர் சரவணக்​குமார் (27). இவரது மனைவி பொன்​னழகு (21). இவர்​களுக்கு 2 ஆண் மற்​றும் ஒரு பெண் குழந்​தைகள் உள்​ளனர். கணவன் - மனைவி இரு​வரும் கட்​டிடக் கூலி வேலை செய்து வந்​தனர். அதே ஊரைச் சேர்ந்த ஆனந்​த​ராஜ் (30) என்​பவருக்​கும் பொன்​னழகுக்​கும் இடையே பழக்​கம் ஏற்​பட்​டது. ஆனந்​த​ராஜுக்​கும் திரு​மண​மாகி 2 ஆண் குழந்​தைகள் உள்​ளனர்.

பல மாதங்​களாக பழக்​கம் தொடர்ந்த நிலை​யில், இந்த விவகாரம் பொன்​னழகு​வின் கணவர் சரவணக்​குமாருக்கு தெரிய​வந்​தது. சரவணக்​குமார் கண்​டித்​தும் அவர்​கள் இடையே பழக்​கம் தொடர்ந்​தது.

இந்​நிலை​யில், வெளியூர் சென்​று​விட்டு நேற்று முன்​தினம் நள்​ளிரவு சரவணக்​குமார் வீடு திரும்​பினார். அப்​போது, அவரது வீட்​டில் ஆனந்​த​ராஜும், பொன்​னழகும் இருந்​தனர். இத​னால் ஆத்​திரமடைந்த சரவணக்​குமார், இரு​வரை​யும் கல்​லால் தாக்​கி​யும் அரிவாளால் வெட்​டியும் கொலை செய்​தார். இதையறிந்த பக்​கத்து வீட்​டினர், நேற்று காலை அருப்​புக்​கோட்டை நகர் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

சம்​பவ இடத்​துக்கு வந்த போலீ​ஸார் இரு​வரது உடல்​களை​யும் கைப்​பற்றி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து சரவணக்​குமாரை கைது செய்​தனர். சம்​பவ இடத்​தில் மாவட்ட எஸ்.பி. கவுதம் கோயல் விசாரணை நடத்தினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT