தாம்பரம்: சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (24). எம்பிஏ பட்டதாரியான இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஒரு மாத காலமாக வேலை செய்து வருகிறார். முதல்மாத ஊதியம் வாங்கியதால், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆதரவற்றோருக்கு இனிப்பு வழங்க திட்டமிட்டார்.
அதன்படி, நேற்று முன்தினம்இரவு பணி முடித்து வீட்டுக்குச்செல்லும் வழியில் தாம்பரம் சானடோரியம் அருகே உள்ள நடைமேம்பாலத்தின் மீது தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற நபர்களுக்கு தனது முதல் மாத ஊதியத்தில் வாங்கிவந்த லட்டுவை கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் பெப்பர் ஸ்பிரேயை புவனேஸ்வரியின் முகத்தில் அடித்தார். இதனால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டுதுடித்துக் கொண்டிருந்த புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினைஅந்த நபர் பறிக்க முயன்றதாகதெரிகிறது.
இதனால் புவனேஸ்வரி கூச்சலிட்டார். அப்போதுஅங்கு இருந்தவர்கள் சேர்ந்துசெயின் பறிக்க முயன்ற நபரைமடக்கிப் பிடித்து தாம்பரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபரிடம் தாம்பரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் குப்புசாமி (46), ஓஎம்ஆரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பது தெரியவந்தது.
மேலும் பம்மலில் சொந்த வீட்டில் வசித்து வந்த அவர், ஆன்லைன்டிரேடிங்கில் பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், தனது வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்து வீட்டை விற்றார்.
ஆனால் வீடு விற்ற பணம் ரூ.60 லட்சத்தை கடன்காரர்களுக்கு கொடுக்காமல், மீண்டும் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை மொத்தமாக இழந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது மேல்மருவத்தூரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், கடன் தொல்லையிலிருந்து தப்ப செயின் பறிப்பில் ஈடுபட எண்ணி பெப்பர் ஸ்பிரே வாங்கி முதல் முறையாக புவனேஸ்வரியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது சிக்கியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.