க்ரைம்

தாம்பரம் | ஓடும் ரயிலில் பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலை​யத்​தில் மின்​சார ரயி​லில் பயணம் செய்த பெண்​ணிடம் இருந்து செல்​போனை பறித்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த தொழிலாளி கைது செய்​யப்​பட்​டார்.

அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த அஜய் நாயக் (28), மனை​வி​யுடன் திருச்​சி​யில் கட்​டிடத் தொழிலா​ளி​யாக வேலை செய்து வந்​தார். இரண்டு மாதங்​கள் வேலை செய்​தும் ஊதி​யம் வழங்​கப்​ப​டாத​தால் இரு​வரும் அசாம் செல்ல முடிவு செய்து தாம்​பரம் ரயில் நிலை​யத்​துக்கு வந்​திருந்​தனர்.

போதை​யில் இருந்த அஜய் நாயக், மனை​வியை தாம்​பரம் நிலை​யத்​தில் அமர வைத்​து​விட்டு சானடோரி​யம் ரயில் நிலை​யத்​துக்​குச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

அப்​போது சானடோரி​யத்​தில் இருந்து சென்னை கடற்​கரை நோக்கி புறப்​பட்ட மின்​சார ரயி​லில் பயணம் செய்த தென்​காசி மாவட்​டத்​தைச் சேர்ந்த அடோலின் பிரபா (26) என்​பவரின் செல்​போனை பறித்​துக் கொண்டு தப்​பிக்க முயன்​றார்.

ரயில் மெது​வாக சென்​ற​தால் பாதிக்​கப்​பட்ட பெண் கூச்​சலிட்​டார். இதையடுத்து அங்​கிருந்த பொது​மக்​கள் அஜய் நாயக்கை மடக்​கிப் பிடித்​தனர். செல்​போனை மீட்க முயன்​ற​போது, ரயி​லில் இருந்து இறங்க முயன்ற அடோலின் பிரபா தவறி கீழே விழுந்து தலை​யில் பலத்த காயமடைந்​தார்.

தகவலறிந்த ரயில்வே போலீ​ஸார் அவரை மீட்டு குரோம்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். அவருக்கு தலை​யில் 20 தையல்​கள் போடப்​பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இச்​சம்​பவம் தொடர்​பாக தாம்​பரம் ரயில்வே போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து அஜய் நாயக்கை கைது செய்​தனர். தாம்​பரத்​தில் காத்​திருந்த அவரது மனை​வியை உறவினர்​களு​டன்​ பாது​காப்​பாக அனுப்​பி வைத்​தனர்​.

SCROLL FOR NEXT